மாநிலங்களவைத் தேர்தல்: கூவத்தூர் அணுகுமுறையை கையாளும் கட்சிகள்

இந்­தியா முழு­வ­தும் 15 மாநி­லங்­களில் 57 மாநி­லங்­க­ளவை உறுப்­

பி­னர் பத­வி­க­ளுக்கு இம்­மா­தம் 10ஆம் தேதி தேர்­தல் நடை­பெ­று­கிறது. வேட்­பு­ம­னுத் தாக்­கல் முடிந்­துள்ள நிலை­யில், பல மாநி­லங்­களில் போட்­டி­யின்றி பலர் தேர்­வாகி உள்­ள­னர். அதேநேரம், ராஜஸ்­தான், கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா, அரி­யானா ஆகிய நான்கு மாநி­லங்­களில் 16 மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் பத­வி­க­ளுக்­குத் தேர்­தல் நடக்க உள்­ளது. இந்த மாநி­லங்­களில் பாஜ­க­வும் காங்­கி­ர­சும் கூடு­தல் இடங்­க­ளைப் பெறு­வ­தற்கு போதிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பலம் இல்­லா­த­தால், சுயேச்­சை­கள் மற்­றும் பிற கட்­சி­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை அவற்­றின் பக்­கம் இழுக்­கும் முயற்­சி­யில் இறங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தங்­கள் கட்­சி­யைச் சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவா­மல் இருக்க, சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு சசி­கலா நட­ரா­ஜன் கையாண்ட கூவத்­தூர் அணுகு

முறை­யைப் மற்ற கட்­சி­கள் தற்­போது கடைப்­பி­டித்து வரு­கின்­றன.

ஜெய­ல­லி­தா­வின் மறை­வுக்­குப் பிறகு ஓ. பன்­னீர்­செல்­வத்­துக்கு ஆத­ர­வாக சில சட்­ட­மன்ற உறுப்­பி ­னர்­களும் சசி­க­லா­வுக்கு ஆத­ர­

வா­கச் சில­ரும் இருந்­த­னர்.

தன்வசம் உள்ள சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பன்­னீர்­செல்­வம் பக்­கம் சாயா­மல் இருக்க, அவர்­கள் அனை­வ­ரை­யும் சசி­கலா பேருந்­தில் ஏற்றி கூவத்­தூர் சொகுசு விடு­தி­யில் தங்­க­வைத்­தார். சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரை­யும் அங்கு அவர் தமது நேரடி பார்­வை­யின்­கீழ் வைத்­துக்­கொண்­டார்.

இந்நிலையில், இம்­மா­தம் நடை­பெற இருக்­கும் மாநி­லங்­க­ளவைத் தேர்­தலை முன்­னிட்டு தங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பாஜக தூண்­டில் போடும் என்று பிற

கட்­சி­யினர் அஞ்­சு­கின்­ற­னர்.

இத­னால் தனது சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவு­வ­தைத் தடுக்க ராஜஸ்­தான் காங்­கி­ரஸ் அவர்­களை நட்­சத்­திர ஹோட்­ட­லில் தங்­க­வைத்­துள்­ளது.

அதே­போல மகா­ராஷ்­டி­ரா­வின் ஆளும் கூட்­ட­ணி­யும் தனது சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை ஐந்து நட்­சத்­திர ஹோட்­ட­லில் தங்­க­வைத்து வைத்த கண் வாங்­கா­மல்

கண்­கா­ணித்து வரு­கிறது.

மகா­ராஷ்­டி­ராவை சிவ­சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்­கி­ரஸ் ஆகிய கட்­சி­க­ளைக் கொண்ட கூட்­டணி ஆட்சி செய்­கிறது.

"இம்­மா­தம் 10ஆம் தேதி மாநி­லங்­க­ள­வைத் தேர்­தல் நடை­பெற இருப்­ப­தால் அது­வரை சிவ­சே­னா­வைச் சேர்ந்த அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் எங்­கள் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த பிற சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் தென்­மும்­பை­யில் உள்ள ஐந்து நட்­சத்­திர ஹோட்­ட­லில் ஒன்­றா­கத் தங்க வைத்­துள்­ளோம். பாஜ­க­வி­னர் நேர்­மை­யற்ற வகை­யில் தேர்­த­லைச் சந்­திக்­கும் வாய்ப்­பு­கள் உள்­ள­தால் அதை எதிர்­கொள்ள நாங்­கள் ஒன்­றி­ணைந்து தேர்­தல் வியூ­கங்­களை வகுக்க இது வகை செய்­யும்," என்று சிவ­சே­னா­வைச் சேர்ந்த முக்­கிய பிர­மு­கர் தெரி­வித்­தார்.

மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தொடர்பில் இல்லை என்று மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டேல் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!