என்டியுசியில் டெஸ்மண்ட் டான்

அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் ஒரு பகு­தி­யாக உள்­துறை மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­ச­ரான டெஸ்­மண்ட் டான், தனது அர­சி­யல் பத­வி­க­ளி­லி­ருந்து விலகி தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சில் (என்­டி­யுசி) இணை­கி­றார்.

தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சில் தற்­போது துணைத் தலை­மைச் செய­லா­ள­ராக உள்ள போக்கு வரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட்­டுக்­குப் பதி­லாக தொழிற்­சங்­கப் பொறுப்பை டெஸ்­மண்ட் டான் ஏற்­க­வி­ருக்­கி­றார். இவ­ரது புதிய பொறுப்பு இம்­மா­தம் 13ஆம் ேததி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரு­கிறது.

திரு டான், 52, பிர­த­மர் அலு­ வ­லக துணை அமைச்­ச­ரா­க­வும் நிய­மிக்­கப்­ப­டு­வார் என்று பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று அறி­வித்­தார்.

அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் ஒரு பகு­தி­யாக இந்த மாற்­றங்­கள் இடம்­பெ­று­கின்­றன.

என்­டி­யு­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங்­கு­டன் கலந்து பேசிய பிறகு திரு டானை தொழிற்­சங்க இயக்­கத்­துக்கு அனுப்­பு­வது என்று தான் முடிவு செய்து இருப்­ப­தாக திரு லீ குறிப்பிட்டு இருக்­ கி­றார்.

இத­னி­டையே, என்­டி­யுசி நேற்று ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது. திரு சீ ஹொங் டாட், முழு நேர­ அர­சாங்­க சேவைக்­குத் திரும்பு வதற்கு ஏது­வாக அவரை விடு விக்­கும்­படி என்­டி­யு­சி­யின் தலை வரான திரு­வாட்டி மேரி லியூ­வுக்கு சென்ற வியா­ழக்­கி­ழமை பிர­த­மர் லீ கடி­தம் எழு­தி­னார் என்று அந்த அறிக்கை தெரி­வித்­தது.

அதே­போல, திரு டானை தொழிற்­சங்க இயக்­கத்­தில் ஏற்­றுக் கொள்­வது பற்றி என்­டி­யுசி மத்­திய செயற்­குழு பரி­சீ­லிக்க வேண்­டும் என்­றும் பிர­த­மர் கேட்­டுக்­கொண்­டார்.

சென்ற வெள்­ளிக்­கி­ழமை கூடிய என்­டி­யுசி மத்திய செயற்­குழு திரு லீயின் வேண்­டு­கோளை ஏற்­றுக் கொண்­டது. பல அமைச்சுகள், மக்கள் கழகம், சிங்கப்பூர் ஆயுதப் படைகள் ஆகியவற்றில் பணிபுரிந்து பல ஆண்டுகால பொதுச் சேவை அனுபவம் உடையவர் டெஸ்மண்ட் டான். கொவிட்-19 தொற்றில் இருந்து நாம் மீண்டு வரும் கால கட்டத்தில் அதற்கு நிறுவனங் களையும் ஊழியர்களையும் ஆயத்தப்படுத்த உதவும் என்டியு சியின் முயற்சிகளுக்கு திரு டெஸ் மண்ட் டான் கணிசமான அளவுக்கு தொண்டாற்றுவார் என தான் நம்பு வதாக அந்தக் கடிதத்தில் திரு லீ குறிப்பிட்டிருந்தார்.

திரு டானை பின்னொரு தேதியில் அதிகாரபூர்வமாக பதவி யில் நியமிக்க தான் திட்டமிட்டு இருப்பதாக என்டியுசி தெரிவித்து உள்ளது. திரு டான், 2020ல் அரசியலுக்கு வந்தார். பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி யின் ஐவர் அணியில் ஒருவராக அவர் தேர்தலில் வெற்றிபெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!