முதியோருக்கு உதவ நேரடித் தொலைபேசி சேவை

முதி­யோ­ருக்கு அவ­சர நேரத்­தில் உத­வு­வ­தற்­காக தேசிய அள­வில் நேரடித் தொைலபேசி சேவை ெதாடங்­கப்­பட்­டுள்­ளது.

இச்­சேவை வாரத்­திற்கு ஐந்து நாள் செயல்­படும்.

டெக் கீ சமூக மன்­றத்­தில் பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று 'ஏசெஸ் கேர்' உதவி தொலை­பேசி சேவையை (Aces Care HelpLife helpline 6797 6797) அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கி­வைத்­தார்.

திங்­கள் முதல் வெள்­ளிக்­ கிழமை வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனு­ப­வம் வாய்ந்த தொண்­டூ­ழி­யர்­க­ளால் நிர்­வ­கிக்கப்படும் நேரடித் தொைலபேசி எண்ணில் முதி­யோர்­கள் தொடர்பு­ கொண்டு அவ­சர உத­விக்கு கோரிக்கை விடுக்­க­லாம்.

கடந்த அக்­டோ­பர் மாதம் இத்­த­கைய சேவையை தொடங்­கு­வ­தற்­கான முயற்­சியை 'ஏெசஸ் கேர்', சமூக அற­நி­று­வ­ன­மான 'ஆக்­டோ­பஸ்8' ஆகியவை எடுத்­தி­ருந்­தன.

சிங்­கப்­பூ­ரில் கொள்­ளை­நோய் பர­விய காலத்­தில் தனி­மை­யில் இருந்த முதி­யோர் மன ­உளைச்­ச­லுக்கு ஆளா­கி­னர். அவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் புதிய சேவை தொடங்­கப்­பட்­டுள்­ளது.

அதிக தொண்­டூ­ழி­யர்­கள் சேர்க்­கப்­பட்டு, பயிற்சி அளிக்­கப்­பட்டு இதர தொகு­தி­க­ளுக்­கும் சேவை விரி­வு­ப­டுத்­த­வி­ருக்­கிறது.

அவ­சர உதவியோடு இணை­யம் வழி­யாக உணவை வர­வ­ழைப்­பது, மருத்­துவ சேவைக்கான முன் ­ப­திவுகளை மாற்­று­வது உள்­ளிட்ட ஆத­ரவுச் சேவை­கள் முதி­யோ­ருக்கு வழங்­கப்­படும்.

மன­உ­ளைச்­ச­லால் பாதிக்­கப்­பட்ட முதி­யோ­ருக்கு ஆலோ­ச­னை­க­ளை இந்த நேரடித் தொலை­பேசி சேவை வழங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!