சிங்கப்பூர் வழியாக சிட்னி சென்றவருக்கு குரங்கம்மை

பார்­சி­லோ­னா­வில் இருந்து சிங்­கப்­பூர் வழி­யா­கச் சென்ற பய­ணிக்கு குரங்­கம்மை பாதிப்பு இருப்­பது சிட்­னி­யில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 2ஆம் தேதி சிங்­கப்­பூர் வழி­யாக அவர் சிட்னி சென்று உள்­ளார். மறு­நாள் அவ­ருக்கு குரங்­கம்மை இருப்­பது தெரியவந்­தது.

இதன் தொடர்­பில் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் கடந்த சனிக்­கி­ழமை நியூ சவுத் வேல்ஸ் அதி­கா­ரி­கள் தக­வல் தெரி­வித்­த­தாக சிங்­கப்­பூர் சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது.

குரங்­கம்மை ஒரு தொற்று நோயா­கும். விலங்­கு­கள் மூலம் இந்­நோய் மனி­தர்­க­ளுக்­குப் பர­வு­கிறது. உல­கம் முழு­வ­ரும் குரங்­கம்மை அதி­க­ரித்து வரு­வ­தால் பல நாடு­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்கை­களை முடுக்­கி­விட்­டுள்­ளன. இதுவரை சிங்­கப்­பூ­ரில் யாரும் குரங்­கம்மை தொற்­றால் பாதிக்­கப்­ப­ட­வில்லை.

குரங்­கம்மை பாதிப்பு இருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்ட பயணி ஜூன் 1ஆம் தேதி பார்­சி­லோ­னா­வி­லி­ருந்து கிளம்­பி­யி­ருக்­கி­றார்.

மறு­நாள் ஜூன் 2ஆம் தேதி அவர் சாங்கி விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தார். அதே நாள் அன்று சிட்­னிக்­குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்பு இடை­வ­ழிப் பய­ணி­கள் தங்­கு­மி­டத்­தில் அவர் தங்­கி­யுள்­ளார். ஆனால் விமான நிலை­யத்­தின் மற்ற இடங் ­க­ளுக்கு அவர் செல்­ல­வில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி வித்தது. அந்­தப் பயணி சிங்­கப்­பூ­ரில் நுழை­ய­வில்லை. சமூ­கத்­தில் மற்­ற­வர்­களைத் தொடர்புகொள்­ள­வில்லை. இத­னால் அவர் மூலம் சமூ­கத்­தில் குரங்­கம்மைத் தொற்று பர­வும் அபா­யம் தற்­போது இல்ைல.

இருந்­தா­லும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து உள்ள தாகவும் அவ­ரு­டன் யார், யார் தொடர்­பில் இருந்­தார்­கள் என்­ப­தைக் கண்­ட­றி­வ­தற்­காக இரண்டு விமா­னங்­களில் நோய்த் தொற்று தடங்­க­ளைக் கண்­ட­றி­யும் முயற்­சிகள் எடுக்கப்பட்டதாகவும் என்று அமைச்சு சொன்னது.

"அவ­ருக்கு நெருக்­க­மாக யாரும் இருந்­த­தாகத் தெரி­ய­வில்லை என்­ ப­தால் யாரை­யும் தனி­மைப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­ட­வில்லை. சுமார் 13 பேர் அவ­ரு­டன் ஓர­ளவு நெருக்­க­மாக இருந்­தி­ருக்­க­லாம். அவர்­கள் அனை­வ­ரும் தொலை­பேசி வழி கண்­கா­ணிப்­பின் கீழ் 21 நாட்­கள் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். தொலை­பே­சி­யில் அழைக்­கப்­பட்டு தின­மும் அவர்­க­ளது உடல்­நிைல குறித்து விசாரிக்கப்படும்.

"குரங்கம்மைத் தொற்றுக்கான அறிகுறிகள் அவர்களிடம் தென் பட்டால் மருத்துவரீதியில் மதிப்பிடப் பட்டு அவர்களது உடல் நலம் குறித்து மேலும் மதிப்பிடுவதற்காக தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்," என்று அமைச்சு மேலும் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!