ஈரச்சந்தைகளில் கோழி இறைச்சி இன்னும் இருப்பில் உள்ளது

மலேசியா கோழி ஏற்றுமதிக்கு தடை விதித்து ஒரு வாரமாகி உள்ள நிலையில் சிங்கப்பூர் ஈரச்சந்தைகளில் உள்ள சில கடைகளில் கோழி இறைச்சி தொடர்ந்து கிடைக்கிறது.

ஆனால் தங்களிடம் இருப்பு அவ்வளவாக இல்லை என்று கோழி விற்பனையாளர்கள் கூறினார்கள்.

பிடோக் புளோக் 216ல் உள்ள ஈரச்சந்தை, கிம் மோ ஈரச்சந்தை ஆகியவற்றில் புதிய கோழி இறைச்சி விற்று வந்த பல கடைகள் மூடப்பட்டுள்ளன.

சில கடைகள் குளிரூட்டப்பட்ட கோழி அல்லது உறைந்த கோழியை விற்று வருகின்றன.

தடை நடப்புக்கு வரும் முன்னர், கோழி விநியோகிப்பாளர்கள் தங்களுக்கு கூடுதல் கோழியை அனுப்பியதாக கிம் மோ சந்தையில் கடை வைத்திருக்கும் திரு வின் ஹோங் கூறினார்.

அவற்றை காற்று புக முடியாத பைகள் போன்றவற்றில் வைத்துள்ளதாகவும் அந்தக் குளிரூட்டப்பட்ட கோழியைத் தான் தற்போது விற்று வருவதாகவும் அவர் சொன்னார்.

கேலாங் சிராய் சந்தையில் உள்ள சில கடைக்காரர்கள், இன்னும் ஒரு வாரத்துக்குத் தேவையான கோழி இருப்பதாக கூறினர். அது தீர்ந்துபோன பின்னர் உறைந்த கோழியை விற்க வேண்டியதுதான் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஈரச்சந்தைகளில் உள்ள கடைக்காரர்கள் சிலர் ஏற்கெனவே உறைந்த கோழிக்கு மாறிவிட்டனர்.

"புதிய கோழியா அல்லது உறைந்த கோழியா என்று எனது வாடிக்கையாளர்கள் பார்ப்பதில்லை. கோழி சாப்பிட விரும்பினால் அவர்கள் உறைந்த கோழியையும் வாங்கிச் செல்கிறார்கள்," என்றார் கேலாங் சிராய் சந்தையில் இறைச்சி கடை வைத்திருக்கும் ஹுஸ்னி ஹஷிம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!