பண வியாபாரியின் $1 மில்லியன் மாயமான விவகாரம்: 2 ஆண்டுகளாக தேடப்பட்டவர் மலேசியாவில் பிடிபட்டார்

இரண்­டாண்டு கால­மாக தேடப்­பட்டு வந்த சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் மலே­சி­யா­வில் சிக்­கினார். பண வியா­பாரி ஒரு­வ­ரின் $1 மில்லி­யன் தொகை மாய­மா­கி­விட்­ட­தன் தொடர்­பில் அந்­தச் சிங்­கப்­பூ­ரர் தேடப்­பட்டு வந்­தார். அவர் விடு­மு­றை­யைக் கழிக்க குடும்­பத்­து­டன் மலே­சியா சென்­றி­ருந்­தார்.

அந்த நபர் கைது செய்­யப்­பட்­டதை அடுத்து 48, 49 வய­துகளில் உள்ள இதர இரு சிங்­கப்­பூ­ரர்­களும் பிடி­பட்டு இருக்­கி­றார்­கள். இந்த மூவ­ரும் கார் வியா­பாரம் தொடர்­பான காரி­யங்­களில் ஈடு­பட்டு வரு­ப­வர்­கள். மூவ­ரும் ஜோகூர் பாரு­வில் பிடி­பட்­ட­னர்.

54 வயது தொழி­ல­தி­பர் ஒரு­வர் சில நாட்­க­ளுக்கு முன் பாங்­கு­னான் சுல்­தான் இஸ்­கந்­தர் சுங் குடி­நு­ழைவு வளா­கத்­தில் தன்­னு­டைய பாஸ்­போர்ட்டை தாக்­கல் செய்­த­போது உட­ன­டி­யாக எச்­ச­ரிக்கைக் கரு­வி­யில் அறி­குறி தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து குடி­நு­ழை­வுத் துறை அதி­கா­ரி­கள் அவரைத் தடுத்­து­வைத்து காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

காவல்­துறை விரை­வா­கச் செயல்­பட்டு இதர இரண்டு சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் கைது செய்­தது. ஜோகூர் பாரு­வில் பண வியா­பாரி ஒரு­வ­ரி­டம் 2020 மார்ச் 2ஆம் தேதி பெரும் பணம் மாய­மா­கி­விட்­டது.

அதன் தொடர்­பில் அந்த மூவ­ரும் சிக்கி இருக்­கி­றார்­கள்.

காவல்­துறை இப்­போது மலே­சி­யர் ஒரு­வரைத் தேடி வரு­கிறது. அவர் அந்­தப் பண வியா­பா­ரிக்கு எட்டு ஆண்டு காலம் எடு­பி­டி­யாக வேலை பார்த்து வந்­தார்.

அவர் மார்ச் 2ஆம் தேதி காலை நேரத்­தில் மாய­மா­கி­விட்­டார். அன்று பணத்தை ஒரு வங்­கி­யில் போடும் பொறுப்பு அந்த மலே­சி­ய­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு இருந்­த­தாக தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

அவர் தனது நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான குண்டு துளைக்­காத காரை ஓட்டிக்­கொண்டு சென்­றார்.

பாது­காப்பு வாகனம் ஒன்­றில் பணம் வங்­கிக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டது. அவர்­கள் வங்­கியை அடைந்­த­போது காலை 8.45 மணி. அப்­போது வங்கி திறக்­கப்­ப­ட­வில்லை.

குண்டு துளைக்­காத காரை ஓட்டி வந்த மலே­சி­யர் திடீ­ரென தனக்கு நெஞ்சு வலிப்­ப­தா­கக் கூறி­னார்.

தான் வேலை பார்க்­கும் இடத்­தில் மருந்து இருப்­ப­தா­க­வும் அதை வேலை­யி­டத்­திற்குச் சென்று எடுத்து வரும்படியும் தன்­னு­டன் வந்த சக ஊழியர், பாது­காப்புக் காவ­லர்­க­ளி­டம் அந்த மலே­சி­யர் கூறினார்.

அவர்கள் சென்றனர். அப்போது பணம் அந்த மலேசியர் வசம் இருந்தது.

மருந்தை எடுத்­துக்­கொண்டு அவர்­கள் திரும்பிவந்தபோது அந்த ஆட­வர் வாகனத்துடன் மாய­மாகி இருந்­தார்.

அவர், நிறு­வ­னத்­தின் வாக­னத்தை ஓட்டிக்­கொண்டு டாங்கா பே என்ற இடத்­திற்­குச் சென்று இருக்­கி­றார் என்­றும் அங்கு அவர் அந்தச் சிங்­கப்­பூரர்­க­ளைச் சந்­தித்­தார் என்­றும் அவர்கள் பணத்­தைப் பங்கு போட்­டுக்கொண்­டார்­கள் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது.

அவர்­கள் நிறு­வ­னத்­தின் வாகனத்தைக் கைவிட்­டு­விட்டு ஓடி­விட்­டார்­கள்.

நம்­பிக்கை மோசடி விவ­கா­ரத்­தில் சம்­பந்­தப்­பட்டு இருக்­கி­றார் என்று நம்­பப்­படும் 49 வயது மலே­சி­யரை காவல்­துறை தேடி வரு­வ­தாக ஜோகூர் வர்த்­தக புலன்­விசா­ர­ணைத் துறைத் தலை­வர் அம்­ரான் முகம்­மது ஜுசின் கூறி­னார்.

மேல் விவ­ரங்­க­ளைத் தெரி­விக்க அவர் மறுத்­து­விட்­டார்.

கொவிட்-19 முடக்­கம் கார­ண­மாக அந்த மூன்று சிங்­கப்­பூ­ரர்­களும் கடந்த இரண்­டாண்டு காலம் காவல்­து­றை­யி­டம் சிக்­கா­மல் இருந்து வந்­தி­ருக்­கி­றார்­கள் என்று தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

குடும்­பத்­து­டன் மலே­சியா சென்­றி­ருந்­த­போது பிடி­பட்ட ஆட­வர், காவல்­துறை பிணை­யின் பேரில் வெளியே இருக்­கிறார். அவ­ரி­டம் இருந்து வாக்கு­மூ­லம் பதி­யப்­பட்டு உள்­ளது.

அவர், கடு­மை­யான நோயால் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தா­கத் தெரி­கிறது. இதர இரண்டு சந்­தேகநபர்­கள் விசா­ர­ணைக் காவ­லில் இருக்­கி­றார்­கள் என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!