சமூக ஊடகங்களில் தீபோல பரவிய நயன்தாரா விக்னே‌ஷ் திருமணம்

முன்னணி தமிழ் திரைப்பட நடிகை நயன்தாரா, அவரது காதலரும் இயக்குநருமான விக்னே‌ஷ் சிவன் இவரின் திருமணம் இன்று காலை மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்தின் முன்னிலையில் அவர் தாலியை எடுத்துக் கொடுக்க, திருமணம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

விக்னேஷ் சிவன் தமது சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்ட திருமணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தீ போல பரவி வருகின்றன.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 20 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று இலவசமாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தனர் என்றும் கூறப்பட்டது.

காலை நடந்த திருமணத்தில் தற்போது நயன்தாராவுடன் ஜவான் என்ற படத்தில் நடித்துவரும் இந்தி நடிகர் ஷாருக் கான், அவரது மனைவி கெளரி கான் இருவரும் கலந்துகொண்டனர்.

தமிழ் திரைப்பட உலகைச் சேர்ந்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஷாலினி அஜித்குமார், ஷாமிலி, விக்ரம் பிரபு, குஷ்பு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட நடிகர்களும் அதில் பங்கேற்றனர்.

ஏ ஆர் ரகுமான், அனிருத், கே எஸ் ரவிக்குமார், மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், எஸ் ஜே சூர்யா, அட்லி, ஹரி, உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

திருமண நிகழ்வு படமாக்கப்பட்டு அதன் உரிமை நெட்ஃபிலிக்ஸ் தளத்துக்கு 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

அதில் நயன்தாராவின் திரைப்பட வாழ்க்கையைப் பற்றிய சிறிய விளக்கப்படமும் சேர்க்கப்படும் என்று திரைப்படத் துறை வட்டாரங்கள் கூறின.

திருமண நிகழ்வைத் திரைப்பட நிகழ்வாக மாற்றும் பொறுப்பு இயக்குநர் கெளதம் மேனனிடம் வழங்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மெஹந்தி - அதாவது மருதாணி வைக்கும் சடங்குகளில் மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!