வீவக வீட்டு விலைகள் 23வது மாதமாக உயர்வு

உட்லண்ட்ஸ், பாசிர் ரிஸ் பகுதிகளிலும் $1 மில்லியனுக்குமேல் வீடுகள் கைமாறின

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) மறு­விற்­பனை வீட்டு விலை­கள் மே மாதத்­தில் தொடர்ந்து 23வது மாத­மாக உயர்ந்­தன. அதே நேரத்­தில், அந்த மாதம் குறை­வான வீடு­கள் கைமா­றின என்று 99.co, எஸ்­ஆர்­எக்ஸ் ஆகிய சொத்­துச் சந்தை இணை­யத்­த­ளங்­கள் தெரி­வித்­தன. மே மாதத்­தில் பாசிர் ரிசி­லும் முதிர்ச்­சி­ய­டை­யாத பேட்­டை­யான உட்­லண்ட்­சி­லும் முதன்­மு­றை­யாக $1 மில்­லி­ய­னுக்கு மறு­விற்­பனை வீடு­கள் கைமா­றின.

உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 83ல் 189 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வுள்ள எக்­சி­கி­யூட்­டிவ் வீடு, $1.04 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டது. அதே­போல, உட்­லண்ட்ஸ் ஸ்திரீட் 81ல் 189 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வுள்ள மற்­றொரு எக்­சி­கியூட்­டிவ் வீடு, $1.03 மில்­லி­யனுக்குக் கைமா­றி­யது.

பாசிர் ரிஸ் ஸ்தி­ரீட் 13ல் அதே 189 சதுர மீட்­டர் பரப்­ப­ளவு கொண்ட இரண்டு மாடி எக்­சி­கியூட்­டிவ் மேசனட் வீடு $1,138,888க்கு விலை­போ­னது.

ஹெண்­டர்­சன் ரோட்­டில் உள்ள ஓர் ஐந்­தறை வீடு­தான் இது­வரை ஆக அதிக விலைக்கு விற்­கப்­பட்ட வீவக மறு­விற்­பனை வீடாகும். 96 ஆண்டுகள் எஞ்­சிய குத்­த­கை­கா­ல­மும் 113 சதுர மீட்டர் பரப்­ப­ள­வும் கொண்­டுள்ள அந்த வீடு, சென்ற மாதம் $1.4 மில்­லி­யனுக்கு விற்­கப்­பட்­டது.

கடந்த மே மாதத்­தில் 30 மறு­விற்­பனை வீடு­கள் குறைந்­தது $1 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டன. ஒப்­பு­நோக்க, ஏப்­ரல் மாதத்­தில் 22 வீடு­கள் $1 மில்­லி­ய­னுக்­கு­மேல் விற்­ப­னை­யா­கின.

நேற்­றைய நில­வ­ரப்­படி, இவ்­வாண்டு இது­வரை குறைந்­தது 145 வீவக மறு­விற்­பனை வீடு­கள் $1 மில்­லி­ய­னுக்­கு­மேல் கைமா­றின.

ஏப்­ரல் மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது மே மாதத்­தில் வீவக மறு­விற்­பனை வீட்டு விலை­கள் 0.5 விழுக்­காடு கூடின. மாறாக, ஏப்­ர­லில் வீட்டு விலை­கள் 1.1 விழுக்­காடு ஏற்­றம் கண்­டி­ருந்­தன.

கடந்த ஆண்டு மே மாதத்­து­டன் ஒப்­பு­நோக்க, கடந்த மாதம் மறு­விற்­பனை வீட்டு விலை­கள் 11 விழுக்­காடு உயர்ந்­தன. அனைத்து வகை வீடு­க­ளி­லும் முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடை­யாத பேட்­டை­க­ளி­லும் வீட்டு விலை­கள் ஏற்­றம் கண்­டன.

என்­றா­லும், ஏப்­ர­லு­டன் ஒப்­பு­நோக்க கடந்த மாதம் கைமா­றிய வீடு­க­ளின் எண்­ணிக்கை 5.1 விழுக்­காடு குறைந்து, 2,156ஆக பதி­வா­னது. ஏப்­ர­லில் இந்த எண்­ணிக்கை 2,273ஆக இருந்­தது.

கடந்த மாதம் தேவைக்­கேற்ப கட்­டப்­படும் வீடு­கள் (பிடிஓ) விற்­ப­னைக்கு விடப்­பட்­ட­தால் வீடு வாங்­கு­வோ­ரின் கவ­னம் புது வீடு­க­ளின் பக்­கம் திரும்­பி­யி­ருக்­க­லாம் என சொத்­துச் சந்தை நிபு­ணர்­கள் கூறி­னர். குவீன்ஸ்­ட­வுன், புக்­கிட் மேரா, தோ பாயோ ஆகிய முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் மூன்று விற்­ப­னைத் திட்­டங்­கள் கடந்த மாதம் வெளி­யி­டப்­பட்­டன.

எஞ்­சிய வீட்டு விற்­ப­னைத் திட்­டத்­தின்­கீழ் கடந்த மாதம் வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன. அத்­திட்­டன்­கீழ் சில வீடு­கள் கட்டி முடிக்­கப்­பட்­டு­விட்ட நிலை­யி­லும் வேறு சில வீடு­கள் கட்டி முடிக்­கப்­படும் தரு­ணத்­தி­லும் இருந்­தன.

வரும் ஆகஸ்ட்­டில் ஏறக்­குறைய 4,900 பிடிஓ வீடு­கள் விற்­பனைக்கு விடப்­ப­ட­வுள்­ளன. அங் மோ கியோ, புக்­கிட் மேரா, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், தெம்­பனிஸ், உட்­லண்ட்ஸ் உள்­ளிட்ட வட்­டா­ரங்­களில் அந்த வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!