கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய மலேசியா முடிவு

மாற்றுத் தண்டனை குறித்து சட்ட நிபுணர்களுடன் விரிவான ஆய்வு

கட்­டாய மரண தண்­ட­னையை ரத்து செய்­யப்­போ­வ­தாக மலே­சியா அறி­வித்­துள்­ளது. இதற்கு மாற்­றுத் தண்­டனை என்­ன­வென்­பது நீதி­மன்­றங்­க­ளின் முடி­வைப் பொறுத்­தது என்று மலே­சி­யப் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் டாக்­டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர் தெரி­வித்­துள்­ளார்.

மாற்று தண்­டனை குறித்த ஆய்­வ­றிக்கை கடந்த புதன்­கி­ழமை (ஜூன் 8) அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து கட்­டாய மரண தண்­ட­னையை ரத்து செய்ய முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

"ஆய்­வ­றிக்­கை­யில் விளக்­கி­ய­படி கட்­டாய மரண தண்­ட­னைக்கு மாற்று தண்­டனை குறித்த சிறப்­புக் குழு­வின் பரிந்­து­ரை­க­ளைக் கொள்கை அள­வில் ஏற்­றுக்­கொள்­ள­வும் அர­சாங்­கம் இணங்கி உள்­ளது," என்று அமைச்­சர் நேற்­றுக் காலை வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

மேலும், "முன்­னாள் தலைமை நீதி­பதி ரிச்­சர்ட் மாலாஞ்­சும் தலை­மை­யி­லான சிறப்­புக் குழு­வில் சட்ட நிபு­ணர்­கள் இடம்­பெற்று உள்­ள­னர்.

"மலாயா மாநி­லத்­தின் முன்­னாள் தலைமை நீதி­பதி, முன்­னாள் துணைத் தலைமை வழக்­க­றி­ஞர், வழக்­க­றி­ஞர்­கள், முன்­னணி சட்ட நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த சட்ட விரி­வு­ரை­யா­ளர்­கள் மற்­றும் குற்­ற­வி­யல் சட்ட நிபு­ணர்­கள் ஆகி­யோர் இந்­தக் குழு­வில் உள்­ள­னர்," என்­றும் அறிக்கை தெரி­வித்­தது.

கட்­டாய மரண தண்­டனை விதிக்­கப்­ப­டக்­கூ­டிய 11 வித­மான குற்­றங்­க­ளுக்கு மாற்­றுத் தண்­ட­னை­யாக பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ள­வற்றை பரி­சீ­லனை செய்ய அமைச்­ச­ரவை ஒப்­புக்­கொண்­டதை டாக்­டர் வான் ஜுனைடி உறு­திப்­

ப­டுத்­தி­னார்.

இது தவிர, அபா­ய­க­ர­மான போதைப்­பொ­ருள் தடுப்புச் சட்­டம் 1952 பிரிவு 39பி-க்கு உட்­பட்ட ஒரு குற்­றத்­திற்­கும் 22 இதர குற்­றங்­க­ளுக்­கும் மரண தண்­டனை விதிப்­பதை நீதி­மன்­றம் முடி­வு­செய்­கிறது. மாற்­றுத் தண்­டனை பரிந்­து­ரை­கள் குறித்து தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம், பிர­த­மர் துறை­யின் சட்ட விவ­கா­ரப் பிரிவு மற்­றும் தொடர்­புள்ள அமைச்­சு­கள் அல்­லது துறை­க­ளு­ட­னும் அடுத்­த­கட்ட ஆய்வு மேற்­கொள்­ளப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

மரண தண்­ட­னையை ரத்து செய்­யும் அர­சாங்­கத்­தின் முடிவு அனைத்­துத் தரப்­பி­ன­ரின் உரிமை

களைப் பாது­காப்பதை தனது முன்னுரிமையாக அரசு கொண்டு உள்ளதைக் காட்டுவதாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, மரண தண்­ட­னையை ரத்து செய்­யும் மலே­சிய அர­சாங்­கத்­தின் முடிவு அவ­சி­ய­மான முன்­னேற்­றம் என்று மனித உரி­மைக் கண்­கா­ணிப்பு அமைப்­பின் ஆசி­யா­வுக்­கான துணை இயக்­கு­நர் ஃபில் ராபர்ட்­சன் ஏஎஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­துள்­ளார்.

"இருப்­பி­னும், இந்­தத் தண்­டனை ரத்து செய்­யப்­ப­டு­வதை நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான சட்­டத்­தி­ருத்­தம் மலே­சியா நாடா­ளு­மன்­றத்­தால் ஏற்­கப்­படும் வரை பொறுத்­தி­ருக்க வேண்­டும்.

"கார­ணம், மலே­சி­யா­வின் புதிய அர­சாங்­கம் மனித உரி­மை­க­ளைக் காப்­பது தொடர்­பாக பல உறு­தி­மொ­ழி­களை அளித்­தி­ருந்­த­போ­தி­லும் அவற்­றில் குறிப்­பிட்ட சில மட்­டுமே நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன," என்­றார் அவர்.

இந்­நி­லை­யில், மரண தண்­ட­னையை ரத்து செய்­யும் முடிவை தாம் ஆத­ரிப்­ப­தாக எதிர்த்­த­ரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராம்­கர்ப்­பால் சிங் கூறி­யுள்­ளார். கட்­டாய மரண தண்­ட­னையை நீக்­கு­வதை நாங்­கள் எப்­போ­தும் ஆத­ரித்து வரு­கி­றோம்," என்று ஜன­நா­ய­கச் செயல் கட்­சி­யைச் சேர்ந்த திரு சிங் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!