ஆழ்துளைக் கிணற்றில் 104 மணிநேரம்; சிறுவன் மீட்பு

இந்­தி­யா­வில் 80 அடி ஆழ ஆழ்­துளைக் கிணற்றில் விழுந்­து­விட்ட 11 வயது பையன் 104 மணி நேரத்­திற்குப் பிறகு வெற்­றி­க­ர­மான முறை­யில் உயி­ரோடு மீட்­கப்­பட்­டான்.

சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் ஜாங்­கிரி-ஷம்பா மாவட்­டத்­தில் இருக்­கும் பிஹ்­ரிட் கிரா­மத்தைச் சேர்ந்த சிறு­வன் ராகுல் சாஹு, கடந்த 10ஆம் தேதி பிற்­ப­கல் 2 மணிக்கு தன் வீட்­டின் பின்­பு­றத்­தில் விளை­யா­டிக் கொண்­டி­ருந்­த­போது தவ­று­தலாக ஆழ்­துளைக் குழி­யில் விழுந்­து­விட்­டான்.

செய்தி காட்­டுத் தீயைப்போல பர­வியதை அடுத்து தேசிய பேரி­டர் மீட்­புப் படை, ராணு­வம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் உட்­பட 500க்கும் மேற்­பட்ட மீட்புப் படை­யி­னர் சிறு­வனை மீட்க இரவு பக­லாக முயற்­சி­களை முடுக்­கி­விட்­ட­னர்.

சிறு­வன் 60 அடி ஆழத்­தில் சிக்­கிக் கொண்டு இருந்­ததைக் கண்­டு­பி­டித்த அதி­கா­ரி­கள், உட­ன­டி­யாக அருகே குழி­தோண்டி உயிர்­வா­யுவை அனுப்­பி­னர்.

அதே­வே­ளை­யில், ஆழ்­துளை அருகே மிகப் பெரிய சுரங்­க­மும் தோண்­டப்­பட்டு 104 மணி நேரத்­துக்­குப் பிறகு சிறு­வன் உயி­ரோடு மீட்­கப்­பட்டு பிலாஸ்­பூர் என்ற நக­ரில் இருக்­கும் அப்­போலோ மருத்­து­வ­மனைக்கு உட­ன­டி­யாக கொண்டு செல்­லப்­பட்­டான். அங்கு சிறு­வன் நல்ல நிலை­யில் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறு­வன் ராகுலை வேக­மாக மருத்­து­வ­மனைக்­குக் கொண்­டு­செல்ல சுமார் 100 கி.மீ. தொலை­வுக்குச் சிறப்பு ஏற்­பா­டு­களைச் போக்­கு­வ­ரத்து காவல்­துறை செய்தது.

இத­னி­டையே, சிறு­வன் ராகுல் உயி­ரோடு மீட்­கப்­பட்­டது பற்றி டுவிட்­ட­ரில் கருத்து கூறிய சத்­தீஸ்­கர் முதல்­வர் பூபேஷ் பாகல், எல்­லா­ரின் பிரார்த்­த­னை­யா­லும் மீட்­புக் குழு­வின் இடை­வி­டாத அர்ப்­ப­ணிப்பு முயற்­சி­யா­லும் வெற்­றி­க­ர­மான முறை­யில் மீட்­கப்­பட்டு இருக்­கும் சிறு­வன் ராகுல் விரை­வில் முழு­மை­யா­கக் குண­ம­டைய வேண்­டும் என்று தெரி­வித்­தார்.

உயிரையும் பணையம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை அவர் பெரிதும் பாராட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!