அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம்; சசிகலா தொடங்கிய புரட்சிப் பயணம்

அதி­மு­க­வில் ஒற்­றைத் தலைமை விவ­கா­ரம் சூடு­பி­டித்­துள்ள நிலை­யில் அக்­கட்­சி­யி­லி­ருந்து ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் தோழி யான சசி­கலா புரட்­சிப் பய­ணம் மேற்­கொள்­வ­தாக அறி­வித்­துள்­ளார்.

எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் ஓ. பன்­னீர்­செல்­வ­மும் அதி­மு­க­வின் தலை­மைப் பத­வி­யைக் கைப்­பற்­றும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளனர்.

இதற்கு ஒற்­றைத் தலைமை கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சர்ச்­சை­யில் பழ­னி­சா­மிக்­கும் பன்­னீர்­செல்­வத்­துக்­கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதி­க­ரித்து வரு­கிறது.

இதன் தொடர்­பில் எடப்­பாடி பழ­னி­சாமி தனது ஆத­ர­வா­ளர் களு­டன் தீவிர ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்டு வரும் வேளை­யில் ஓ.பன்­னீர்­செல்­வம் தனது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் டெல்­லி­யில் தவம் கிடப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில் சசி­க­லா­வின் சுற்­றுப் பயண அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

“இன்று பிற்­ப­கல் 12.30 மணிக்கு சென்னை தியா­க­ராய நகர் இல்­லத்­தில் இருந்து புறப்­பட்டு திருத்­தணி வரை செல்­ கிறேன்,” என்று சசி­கலா தெரி­வித்­துள்­ளார். வழி­யெங்­கும் பொது­மக்­களை சந்­திப்­ப­தா­க­வும் ஜெய­ல­லிதா, அண்ணா, எம்­ஜி­ஆர் சிலை களுக்கு மாலை­களை அணி­வித்து மரி­யாதை செலுத்­தப் போவ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

“தமிழ் மண்­ணின் உரி­மை­களை காத்­தி­ட­வும் பெண்­ணி­னத்­தின் பெரு­மை­க­ளைப் பேணி காத்­தி­டும் வகை­யி­லும் புரட்­சித்­தாய் சின்­னம்மா அவர்­கள் புரட்­சிப் பய­ணத்தை தொடங்­கு­கி­றார்,” என்று அவ­ரது சார்­பில் வெளி­யி­டப்­பட்ட அறிக்கை தெரி­விக்­கிறது.

“சசி­கலா பய­ணம் செய்­யும் இடங்­களும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இந்­தப் புரட்சி பய­ணத்­தில் கழக நிர்­வா­கி­கள், கழக முன்­னோ­டி­கள், கழக தொண்­டர்­கள் இளம் தலை­மு­றை­யி­னர் மற்­றும் பொது­மக்­கள் ஆகி­யோர் ஜாதி, மத பேத­மின்றி அனை­வ­ரும் திர­ளாக கலந்துகொள்ள வேண்­டும் என்று சசி­கலா கேட்­டுக் கொண்டு உள்­ளார்.

இதற்­கி­டையே அதி­மு­க­வில் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர், துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­வி­கள் காலா­வ­தி­யா­கி­விட்­ட­தாக அறி வித்த முன்­னாள் அமைச்­சர் சி.வி. சண்­மு­கத்­துக்கு கொலை மிரட்­டல் வந்­துள்­ளது.

இதன் தொடர்­பில் காவல் உயர் அதி­கா­ரி­யி­டம் அவ­ரது தரப்­பி­னர் புகார் அளித்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

‘வாட்ஸ்­ஆப்’ வழி­யாக கொலை மிரட்­டல் விடுத்­துள்ள நபர் மீது காவல்­து­றை­யி­னர் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று புகா­ரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மற்­றொரு நில­வ­ரத்­தில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடை­பெற உள்ள பொதுக்­குழு கூட்­டத்­துக்கு தடை விதிக்க வேண்­டும் என்று ஓ. பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் இணை­யம் வழி­யாக தேர்­தல் ஆணை­யத்­துக்கு மனு அளித்து உள்­ள­னர்.

இத­னால் பொதுக்­குழு திட்ட மிட்­ட­படி நடக்­குமா என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

ஒருங்­கி­ணைப்­பா­ள­ரின் கை யெழுத்து இல்லாமல் பொதுக் கூட்­டத்தை நடத்த முடி­யாது என்று பன்­னீர்­செல்­வம் தரப்பு கூறு­கிறது.

இத­னால் இதற்கு உரிய பதில் நட­வ­டிக்­கையை எடுக்க எடப்­பாடி பழ­னி­சாமி, சட்ட நிபு­ணர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்தி வரு­கி­றார்.

இதன் முடி­வில் பழ­னி­சாமி தரப்­பிலும் தேர்­தல் ஆணை­யத்­தில் பதில் மனுத் தாக்­கல் செய்­யப்­படும் எனத் தெரி­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!