தாத்தா, பேத்தி சடலங்கள்; காவல்துறை விசாரணை

புக்­கிட் பாத்­தோக் பகு­தி­யில் வெவ்­வேறு இடங்­களில் ஒரு 84 வயது முதி­ய­வ­ரும் அவ­ரது 14 வயது பேத்­தி­யும் மாண்ட நிலை­யில் காணப்­பட்­ட­னர்.

புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் உள்ள ஒரு புளோக்­கின் அடித்­த­ளத்­தில் சிறு­மி­யின் உடல் காணப்பட்­டது. இது குறித்து ஜூன் 23 அன்று மாலை 5.50 மணி அள­வில் காவல் துறைக்குத் தக­வல் கிடைத்­தது.

அந்­தச் சிறு­மி­யின் மர­ணத்­தில் சூது இருப்பதாகச் சந்­தே­கிக்­கப்­படவில்லை. அதற்­குச் சில நிமி­டங்­கள் கழித்து முதி­ய­வர் ஒரு­வர் மாண்ட நிலை­யில் கிடப்­பது குறித்து காவல்துறைக்கு மற்­றொரு தக­வல் கிடைத்­தது.

புக்­கிட் பாத்­தோக் ஸ்தி­ரீட் 31ல் ஒரு வீட்­டில் முதி­ய­வ­ரின் சட­லம் காணப்­பட்­டது. முதி­ய­வ­ரின் நெஞ்­சில் காயங்­கள் இருந்­த­தாக காவல் துறை­யி­னர் தெரி­வித்­த­னர்.

சிறு­மி­யின் சட­லம் காணப்­பட்ட இடத்­தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் முதி­யவ­ரின் சட­லம் கிடந்­தது. சிறுமி, முதி­ய­வ­ரின் பேத்தி.

இரு­வ­ரும் ஒரே வீட்­டில் வசித்­த­தா­கக் குறிப்­பிட்ட காவல்துறை, முதி­ய­வ­ரின் மர­ணம் இயற்­கைக்கு மாறா­னது என வகைப்­ப­டுத்தி உள்­ளது.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!