கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க தேவையில்லை: துணைப் பிரதமர்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும்

பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை இப்­போ­தைக்­குக் கடு­மை­யாக்க வேண்­டிய தேவை­யில்லை என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

ஆயி­னும், கொவிட்-19 தொற்று பாதிப்பு அதி­க­மா­கப் பதி­வா­னால் அவ்­வாறு நடக்­காது எனச் சொல்­வ­தற்­கில்லை என்று திரு வோங் கூறி­யி­ருக்­கி­றார்.

கொரோனா தொற்று குறித்த விழிப்­பு­ணர்வு மற்­றும் பரி­சோ­த­னை­யின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­திய அவர், எல்­லாக் குடும்­பங்­களுக்­கும் பத்து விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­கள் (ஏஆர்டி) வழங்­கப்­படும் என்று அறி­வித்­தார். ஏஆர்டி கரு­வி­கள் விநி­யோ­கம் அடுத்த மாதம் தொடங்­கும்.

நீ சூன் சென்ட்­ர­லில் அமைக்­கப்­பட்­டுள்ள நட­மா­டும் தடுப்­பூசி மையத்­தைத் துணைப் பிர­த­மர் வோங் நேற்­றுப் பார்­வை­யிட்­டார். அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், புதிய பிஏ4 மற்­றும் பிஏ5 கொவிட்-19 கிருமி துணைத் திரி­பு­களே அண்­மைய தொற்று உயர்­விற்­குக் கார­ணம் என்­றார்.

"கிரு­மித்­தொற்று பாதிப்பு தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­க­லாம்," என்­றார் திரு வோங்.

"இப்­போ­தைய பாதிப்­பு­கள் தீவி­ரத்­தன்மை மிக்­கவை என்­ப­தற்கு எந்­தச் சான்­றும் இல்லை. மருத்­து­வ­ம­னை­க­ளால் நிலை­மை­யைச் சமா­ளிக்க முடி­கிறது. நடப்­பி­லுள்ள விதி­மு­றை­க­ளைக் கடு­மை­யாக்­கா­ம­லேயே இந்­தக் கிரு­மிப் பர­வல் அலை­யைச் சிங்­கப்­பூ­ரால் கடந்­து­செல்ல இய­லும். ஆனா­லும், நிலைமை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட வேண்­டும்," என்று திரு வோங் சொன்­னார்.

வரும் வாரங்­களில் தொற்­றுப் பர­வல், அதன் தீவி­ரத்­தன்மை, மருத்­து­வ­மனை நில­வ­ரம் போன்ற நில­வ­ரங்­கள் கண்­கா­ணிக்­கப்­படும் என்ற அவர், தேவைப்­பட்­டால் சில மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்டி இருக்கும் என்­றும் குறிப்­பிட்­டார்.

துணைப் பிர­த­ம­ரு­டன் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங்­கும் நீ சூன் நட­மா­டும் தடுப்­பூசி மையத்­திற்­குச் சென்­றி­ருந்­தார்.

மூத்த குடி­மக்­கள் எளி­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் வகை­யில் 50 நட­மா­டும் தடுப்­பூசி மையங்­களை ஏற்­ப­டுத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

முதற்­கட்­ட­மாக, ஈசூன், தெலுக் பிளாங்கா, சாய் சீயில் உள்ள அன்­சர் ஆகிய இடங்­களில் நேற்று அம்­மை­யங்­கள் திறக்­கப்­பட்­டன.

"இப்­போ­தைய கொவிட்-19 அலை­யைப் பாது­காப்­பா­கக் கடந்து­செல்ல நாம் நமது பங்கை ஆற்ற வேண்­டும். தடுப்­பூ­சி­களும் கூடு­தல் தடுப்­பூ­சி­களும் செயல்­தி­றன்­மிக்­க­வை­யாக உள்­ளன. அத­னால்­தான் நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுக்­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றோம்," என்­றார் துணைப் பிர­த­மர்.

அத்­து­டன், வழக்­க­மான தனி­மனி­தர்­க­ளுக்­கான முன்­னெச்­சரிக்­கை­களும் நீடிக்­கின்­றன.

"வெளிப்­பு­றத்­தில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மில்லை என்­ற­போ­தும் முகக்­க­வ­சம் அணி­வதைத் தொட­ரும்­படி மக்­களை ஊக்­கு­விக்­கி­றோம். கூட்­ட­மான இடத்­திற்­குச் சென்­றால் தய­வு­செய்து முகக்­க­வ­சம் அணி­யுங்­கள். உடல்­ந­ல­மில்லை என்­றால் வெளி­யில் சென்று, நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து உண­வ­ருந்­து­வ­தைத் தவிர்க்­க­வும்.

"முடிந்த அள­விற்கு, அவ்­வப்­போது சுய­மாக கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­ளுங்­கள். அதி­லும் குறிப்­பாக கிருமி தொற்றி­யோ­ரு­டன் தொடர்­பில் இருந்­தால் அல்­லது மூத்த குடி­மக்­கள் எவ­ரை­யும் பார்க்­கச் செல்­வ­தாக இருந்­தால் சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்­ளுங்­கள்," என்று திரு வோங் அறிவுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!