ஆப்பிரிக்க அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கவிருக்கும் சிங்கப்பூர்

ஆப்­பி­ரிக்­கக் கண்­டத்­திற்­கான தொழில்­நுட்ப உத­வியை வலுப்­ப­டுத்­தும் புதிய திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, ஆப்­பி­ரிக்க நாடு­க­ளைச் சேர்ந்த அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு நீடித்த நிலைத்­தன்மை, மின்­னி­லக்­க­ம­யப்­படுத்­தல் போன்ற துறை­களில் சிங்­கப்­பூர் பயிற்­சி­ய­ளிக்­கும்.

அந்த மூன்­றாண்டு சிங்­கப்­பூர்-ஆப்­பி­ரிக்­கப் பங்­கா­ளித்­து­வத் தொகுப்­புத் திட்­ட­மா­னது, மூத்த ஆப்­பி­ரிக்க அதி­கா­ரி­கள் சிங்­கப்­பூர் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கல்வி பயில உப­கா­ரச் சம்­பளங்­க­ளை­யும் வழங்­கும்.

சிங்­கப்­பூர் ஒத்­து­ழைப்­புத் திட்­டத்­தின்­கீழ் ஆப்­பி­ரிக்க அதி­கா­ரி­க­ளுக்­குப் பாடப்­பிரிவு­களில் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்.

அதி­கா­ர­பூர்­வப் பய­ண­மாக ருவாண்டா சென்­றுள்ள பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று இந்த விவ­ரங்­களைத் தெரி­வித்­தார்.

கடந்த 1992ஆம் ஆண்டு ஏற்­படுத்­தப்­பட்ட சிங்­கப்­பூர் ஒத்­து­ழைப்­புத் திட்­டத்­தின்­கீழ், இது­வரை 180 நாடு­களைச் சேர்ந்த 137,000க்கும் அதி­கா­ரி­கள் பாடப்­பி­ரி­வு­க­ளி­லும் பயி­ல­ரங்­கு­க­ளி­லும் பங்­கேற்­றுள்­ள­னர்.

"ஆப்­பி­ரிக்­கா­விற்கு முன்­னு­ரிமை அளிக்­கக்­கூ­டிய துறை­களில் பாடப்­பி­ரி­வு­களை வகைப்­ப­டுத்­து­வோம். பரு­வ­நிலை மாற்­றம், நீடித்த நிலைத்­தன்மை, மின்­னி­லக்­க­ம­யப்­ப­டுத்­தல், அறி­வார்ந்த நக­ரங்­கள் உள்­ளிட்ட துறை­களை அவை உள்­ள­டக்­கும்," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு லீ கூறி­னார்.

சிங்­கப்­பூர் ஒத்­து­ழைப்­புத் திட்­டத்­திற்கு ஆப்­பி­ரிக்­க­வில் நல்ல வர­வேற்பு இருப்­ப­தா­க­வும் ருவாண்டா உள்­ளிட்ட ஆப்­பி­ரிக்க நாடு­க­ளைச் சேர்ந்த 12,000க்கும் மேலானோர் சிங்­கப்­பூரின் பாடப்­பி­ரி­வு­களில் சேர்ந்து பயின்­றுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

ருவாண்டா தலை­ந­கர் கிகா­லி­யில் அந்­நாட்டு அதி­பர் பால் ககாமே­யைப் பிர­த­மர் லீ நேற்று சந்­தித்­துப் பேசி­னார். அப்­போது இரு­த­ரப்பு உற­வு­களை மறு­வு­று­திப்­ப­டுத்­திய தலை­வர்­கள் இரு­வ­ரும், துறை­சார்ந்த ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வது குறித்­தும் ஆலோ­சித்­த­னர். பின்­னர் இரு­வ­ரும் கூட்­டா­கச் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.

ஆப்­பி­ரிக்­கா­விற்கு முதன்­மு­றை­யா­கச் சென்­றுள்ள பிர­த­மர் லீ, கிகா­லி­யில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தொடங்­கிய இரண்டு நாள் காமன்­வெல்த் நாடு­க­ளின் தலை­வர்­கள் கூட்­டத்­தில் பங்­கேற்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!