டான் சீ லெங்: வெளிநாட்டு ஊழியர்கள் சமூக இடங்களுக்குத் தொடர்ந்து செல்லலாம்

சிங்கப்பூரில் அண்மையில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகமாகி வருவதை அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து வரும் அதே வேளையில், தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து சுதந்திரமாக சமூக இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இதை வியாழக்கிழமை (ஜூன் 30) அன்று தெரிவித்தார்.

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் பிரபல இடங்களில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க பிரபல இடங்களுக்கான அனுமதிச் சீட்டு முறை தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த முறையில் லிட்டில் இந்தியா, ஜூரோங் ஈஸ்ட், சைனாடவுன், கேலாங் சிராய் ஆகிய நான்கு இடங்களுக்குச் செல்ல விரும்பும் தங்குவிடுதி வெளிநாட்டு ஊழியர்கள், அனுமதிச்சீட்டைப் பெற வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் அதிகபட்சம் 80,000 பேருக்கு அனுமதிச்சீட்டுகள் கிடைக்கும்.

எஸ்ஜிவொர்க்பாஸ் (SGWorkPass) செயலியில் விண்ணப்பித்தால் அனுமதி சிறிது நேரத்தில் கிடைத்துவிடும்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்கு தேவையான, தாங்கள் விரும்பிய நேரத்தில் சமூக இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினாலும், ஆபத்து இன்னும் முழுமையாக அகலவில்லை என்று அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடும் 'நமது வெளிநாட்டு ஊழியர்கள்' கூடத்தைத் திறந்து வைத்தபோது டாக்டர் டான் பேசினார்.

கேலாங் பாருவில் உள்ள அமைச்சின் உறுதி, பரிவு, தொடர்புக் குழுமத்தின் தலைமையகத்தில் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புகழாரம் சூட்ட மனிதவள அமைச்சு அதை அமைத்துள்ளது.

நான்கு பிரிவுகளில் 150க்கும் அதிகமான புகைப்படங்கள் அதில் இருக்கும். ஊழியர்களின் சொந்தக் கதைகள், கொவிட்-19 பரவலின்போது தங்குவிடுதிகளில் ஏற்பட்ட பாதிப்பு, அது கையாளப்பட்ட விதம் போன்றவை விளக்கப்படுகின்றன.

வெளிநாட்டு ஊழியர் அணியின் நலன்காக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அவர்களைத் தொடர்புகொள்ள சமூகம் எடுத்துள்ள முயற்சிகள் ஆகியவை எடுத்துக்காட்டப்படும்.

கூடம் இன்னும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படவில்லை.

ஆனால் உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழிகாட்டுதலுடன் கூடிய சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கூடாரம் சுற்றிக் காட்டப்படும். இவை அடுத்த மாதம் தொடங்கப்படும்.

சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் செய்துள்ள தியாகங்களை இந்தக் கூடாரம் மாணவர்கள் தெரிந்துகொள்ள உதவும் என்று டாக்டர் டான் கூறினார்.

ஒருசிலர் முன்வைக்கும் எதிர்மறைக் கருத்துகளின் பாதிப்பைக் குறைக்க இது உதவும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!