ஆயத்தமாக இருப்பது அவசியம்

சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் வலியுறுத்து

வல்­ல­ரசு நாடு­க­ளுக்கு இடை­யிலான போட்­டி­யும் ஐரோப்­பா­வில் போரும் நடந்­து­வ­ரும் நிலை­யில், உல­கம் வர­லாற்­றில் ஓர் ஆபத்­தான கால­கட்­டத்­தில் இருக்­கிறது என்­றும் அத­னால் ஏற்­படும் விளைவு­களை எதிர்­கொண்டு, நாட்­டின் தற்­காப்பை வலு­வாக வைத்­து இ­ருக்க சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை தயா­ராக இருக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

"இப்­போ­தைய நிச்­ச­ய­மில்­லாச் சூழ­லில், நிலைத்­தன்­மை­யை­யும் பாது­காப்­பை­யும் சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை வழங்­கும் என்­றும் இடர்­கா­லத்­தில் உத­வி­யாக இருக்­கும் என்­றும் சிங்­கப்­பூ­ரர்­கள் எதிர்­நோக்­கு­வர்," என்று தமது வரு­டாந்­திர சிங்­கப்­பூர் ஆயு­தப் படை தினச் செய்­தி­யில் அமைச்­சர் இங் கூறி­ உள்­ளார்.

சிங்­கப்­பூ­ரைப் பாது­காப்­பாக வைப்­ப­தில் தங்­க­ளது பங்கை ஆற்­றி­வ­ரும் அனைத்து ஆயு­தப் படை­வீ­ரர்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை தினம் புகழ் வணக்­கம் செலுத்து­கிறது.

தெம்­ப­னிஸ் உள்ள தெமா­செக் பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூ­ரி­யில் உரை­யாற்­றிய டாக்­டர் இங், இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னும் பனிப்­போ­ருக்­குப் பின்­னும் எட்­டப்­பட்ட அமைதி இப்­போது வறண்டு­விட்­டது என்­றும் ஐரோப்பா பிள­வு­பட்டு நிற்­கிறது என்­றும் ரஷ்­யா­வு­டன் ஒருங்­கி­ணை­யும் நம்­பிக்­கை­கள் பொய்த்­து­விட்­டன என்­றும் கூறி­னார்.

உண­வுப்­பொ­ருள்­கள், எரி­பொருள் விலை­யில் கடும் உயர்வு என்ற வகை­யில், ரஷ்யா-உக்­ரேன் போரின் தாக்­கம் உல­கம் முழு­தும் உண­ரப்­படும் என்று டாக்­டர் இங் குறிப்­பிட்­டார்.

இது, பல நாடு­க­ளி­லும் நிச்­ச­ய­மற்ற அர­சி­யல் சூழ­லுக்கு வித்­தி­டும் என்­றும் அவை கட­னில் தத்­த­ளிக்­க­லாம் அல்­லது அந்த ­நாடு­க­ளின் மக்­கள் பட்­டி­னி­யால் வாட­லாம் அல்­லது அதி­ருப்தி அடைய நேரி­ட­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

அமெ­ரிக்கா-சீனா இடை­யிலான உறவு, கடந்த பல ஆண்டு­களில் இல்­லாத அள­விற்கு ஆக மோச­மாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர் இங், அத்­த­கைய ஆரோக்­கி­ய­மற்ற உற­வு­நிலை­யால் தற்­செ­ய­லா­கவோ நோக்­கத்­து­டனோ ஆபத்து விளை­ய­லாம் என்­றும் எச்­ச­ரித்­தார்.

வெகு­தொ­லை­வில் நிக­ழும் சம்­ப­வங்­க­ளா­லும் சிங்­கப்­பூர் கடு­மை­யாக பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளது என்­றும் அவற்­றின் தாக்­கத்­தில் இருந்து தப்ப முடி­யாது என்­றும் அவர் கூறி­னார்.

ஆனா­லும், சிங்­கப்­பூர் ராணுவப் படை­கள் தயார்­நி­லை­யில் உள்­ளன என்­றும் ஆகா­யம், நிலம், கடல் மட்­டு­மின்றி இணை­ய­வெளி­யி­லும் நாட்­டைத் தற்­காக்­கும் திற­னைப் பெற்­றுள்­ளன என்­றும் டாக்­டர் இங் குறிப்­பிட்­டார்.

"இவ்­வாண்­டில் தேசிய சேவை­யின் 55வது ஆண்­டு­நி­றைவை நாம் கொண்­டா­டும் வேளை­யில், செயற்­பாட்­டுத் தயார்­நி­லை­யில் உள்ள தேசிய சேவை­யா­ளர்­கள் நமது தற்­காப்­பின் முது­கெ­லும்­பா­கத் திகழ்­வதை எண்ணி நாம் பெரு­மி­தம் கொள்­ள­லாம். சாதா­ரணக் குடி­மக்­கள் ஒவ்­வொ­ரு­வரும் தங்­க­ளது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் நமது இல்­லத்­தில் நம் வாழ்க்கை­மு­றை­யும் தற்­காக்க அளப்­ப­ரிய பங்கை ஆற்றி வரு­கின்­ற­னர்," என்­றார் அவர்.

பயோ­பொ­லி­சில் உள்ள பிராக்­டர் அண்ட் கேம்­பில் சிங்­கப்­பூர் புத்­தாக்க மையம், ஜூரோங்­கில் உள்ள வர்த்­த­கச் சங்க மையம், சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு, கண்­காட்சி மையம் ஆகிய இடங்­களில் நேற்று மேலும் மூன்று மறு­அர்ப்­ப­ணிப்­புச் சடங்­கு­கள் இடம்­பெற்­றன.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ, மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி ஆகி­யோர் முறையே அந்­நி­கழ்­வு­களைப் பொறுப்­பேற்று நடத்­தி­னர்.

இந்த நான்கு நிகழ்­வு­க­ளி­லும் கிட்­டத்­தட்ட 290 தேசிய தேவை­யா­ளர்­கள் கலந்­து­கொண்டு, நாட்­டின்­மீது கொண்­டுள்ள பற்­றை­யும் நாட்­டின் தற்­காப்­பிற்­கா­கக் கொண்­டுள்ள கடப்­பாட்­டை­யும் மறு­வு­று­திப்­ப­டுத்­தும் வகை­யில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படைப் பற்­று­றுதி எடுத்­துக்­கொண்­ட­னர்.

தங்­கள் ஊழி­யர்­க­ளின் முகாம் பயிற்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­கும்­படி நிறு­வ­னங்­களை ஊக்­கப்­ப­டுத்­து­வதன்­மூ­லம் தேசிய சேவைக்­கான தனது ஆத­ரவை தொழிற்­ச­மூ­கம் தொட­ரும் என்று சிங்­கப்­பூர் சீன வர்த்­தக தொழிற்­ச­பை­யின் தலை­வர் கோ சூன் கெங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!