இலங்கையில் பணவீக்கம் பேருயர்வு

3.2 மில்லியன் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் முடிவு

இலங்­கை­யில் 1954ஆம் ஆண்­டிற்­குப் பிறகு முதல்­மு­றை­யா­கப் பண­வீக்­கம் 50 விழுக்­காட்­டைத் தாண்­டி­யி­ருக்­கிறது.

இவ்­வாண்டு மே மாதம் 39.1 விழுக்­கா­டாக இருந்த ஒட்­டு­மொத்த பண­வீக்­கம், அத­னை­ய­டுத்த ஜூன் மாதத்­தில் 54.6 விழுக்­கா­டாக உயர்ந்­து­விட்­டது.

உணவு மற்­றும் உண­வு­சா­ராப் பொருள்­க­ளின் விலை­யேற்­றமே, ஆண்டு அடிப்­ப­டை­யி­லான பண­வீக்க உயர்­விற்­குக் கார­ணம் என்று இலங்கை மத்திய வங்கி தெரி­வித்­தது.

அதன்­படி, கடந்த மே மாதம் 57.4 விழுக்­கா­டாக இருந்த உண­வுப்­பொ­ருள் பண­வீக்­கம், ஜூன் மாதத்­தில் 80.1 விழுக்­கா­டாக உயர்ந்­தது. அது­போல, உண­வு­சா­ராப் பொருள்­க­ளின் பண­வீக்­கம் 30.6 விழுக்­காட்­டில் இருந்து 42.4 விழுக்­காட்டை எட்­டி­விட்­டது.

இத­னி­டையே, இலங்­கை­யில் நேற்று முதல் பேருந்­துக் கட்­ட­ணம் 22% உயர்த்­தப்­பட்­டுள்­ளது. அதன்­படி, 32 ரூபா­யாக (S$0.12) இருந்த குறைந்­த­பட்­சக் கட்­ட­ணம் 40 ரூபா­யாக (S$0.16) அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், நாட்­டில் நில­வும் கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உத­வித்­தொகை வழங்க அர­சாங்­கம் முடி­வு­செய்­துள்­ள­தாக தோட்­டத்­தொ­ழில்­துறை அமைச்­சர் ரமேஷ் பத்­தி­ரனா தெரி­வித்­துள்­ளார்.

பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள 3.2 மில்­லி­யன் குடும்­பங்­க­ளுக்கு இம்­மா­தம் முதல் ஆறு மாதங்­க­ளுக்கு 7,500 ரூபாய் (S$29.20) உத­வித்­தொகை வழங்­கப்­படும் என்று ஊட­கங்­க­ளி­டம் அவர் கூறி­னார்.

உலக வங்கி மற்­றும் ஆசிய வளர்ச்சி வங்­கி­யி­டம் இருந்து பெற்ற தலா 200 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் நிதி­யில் இருந்து இந்த உத­வித்­தொகை வழங்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ரயில்வே ஊழி­யர்­கள் வேலை­நி­றுத்­தம்

இதற்­கி­டையே, இலங்கை ரயில்வே ஊழி­யர்­கள் நேற்று திடீர் வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­பட்­ட­னர். போதிய பணி­யா­ளர்­கள் இல்­லாத கார­ணத்­தால் நேற்று 20க்கு மேற்­பட்ட ரயில்­கள் ரத்­து­செய்­யப்­பட்­டன. எரி­பொ­ருள் கிடைக்­கா­த­தால் ஊழி­யர்­கள் பணி­யி­டத்­திற்கு வர முடி­ய­வில்லை என்று கூறப்­பட்­டது.

கொழும்பு துறை­முக ரயில் நிலை­யத்­தில் இருந்து காங்­கே­சன்­து­றைக்கு நேற்று முற்­ப­கல் செல்ல வேண்­டிய ரயில் இரண்டு மணி நேரத்­திற்­கு­மேல் தாம­த­மா­ன­தால் பய­ணி­கள் போராட்­டத்­தில் குதித்­த­னர். இதையடுத்து, அங்கு பதற்­ற­மான சூழல் நில­வி­யது. அப்பிரச்­சி­னை­யைத் தீர்க்க ரயில்வே அதி­கா­ரி­கள் தவ­றி­விட்­ட­தா­கக் கூறி, தற்­கா­லி­க­மா­கப் பணி­யி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்­கப்­போ­வ­தாக இலங்கை ரயில் நிலைய மேலா­ளர்­கள் தொழிற்­சங்­கம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!