சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த இந்திய ஏவுகணை

சிங்­கப்­பூ­ரின் மூன்று செயற்­கைக்­கோள்­க­ளு­டன் இந்­தி­யா­வின் பிஎஸ்­எல்வி-சி53 ஏவு­கணை நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் நேரப்­படி இரவு 8.32 மணிக்கு விண்­ணில் ஏவப்­பட்டது.

ஆந்­திர மாநி­லம், ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வில் அமைந்­துள்ள சதீஷ் தவான் விண்­வெளி மையத்­தின் இரண்­டாம் ஏவு­த­ளத்­தில் இருந்து அந்த ஏவு­கணை செலுத்­தப்­பட்­டது. 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ, 155 கிலோ எடை கொண்ட நியூ­சர், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் 2.8 கிலோ எடை கொண்ட ஸ்கூப்-1 ஆகிய மூன்று சிங்­கப்­பூர் செயற்­கைக்­கோள்­களை அந்த ஏவு­கணை சுமந்து சென்­றது.

அதன்­பின் 18 நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு அம்­மூன்று செயற்­கைக்­கோள்­களும் அவற்­றின் சுற்­றுப்­பா­தை­யில் நிறுத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இவற்­று­டன் மேலும் ஆறு செயற்­கைக்­கோள்­க­ளை­யும் அந்த ஏவு­கணை சுமந்து சென்­றது.

இம்­மு­யற்­சி­யும் வெற்­றி­க­ர­மாக முடிந்த நிலை­யில், 1999ஆம் ஆண்டு முதல் 36 நாடு­க­ளின் 399 செயற்­கைக்­கோள்­களை பிஎஸ்­எல்வி ஏவு­கணை விண்­ணில் செலுத்­தி­ இருக்கிறது.

வெளி­நாட்­டுச் செயற்­கைக்­கோள்­களை அவற்­றின் துல்­லிய சுற்­றுப்­பா­தை­யில் நிறுத்­திய இந்­திய விண்­வெளி ஆய்வு மையக் குழு­வி­ன­ருக்கு அம்மையத்தின் தலை­வர் எஸ் சோம­நாத் பாராட்டு தெரி­வித்­தார்.

டிஎஸ்-இஓ செயற்­கைக்­கோ­ளா­னது நிலப்­ப­கு­தி­க­ளின் வண்­ணப் படங்­களை எடுத்­த­னுப்­ப­வல்­லது என்­றும் மனி­தா­பி­மான உதவி, பேரி­டர் மீட்­புத் தேவை­க­ளுக்கு அது சேவை­யாற்­றும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது சிறிய வணி­க­ரீ­தி­யி­லான செயற்­கைக்­கோளான 'நியூ­சர்', எல்­லா­வித வானி­லை­க­ளி­லும் இர­வி­லும் பக­லி­லும் பட­மெ­டுத்து அனுப்­ப­வல்­லது எனக் கூறப்­பட்­டது.

என்­டியு செயற்­கைக்­கோள் ஆய்வு மையத்­தின் மாண­வர் பயிற்­சித் திட்­டத்­தின்­கீழ், மாண­வர் செயற்­கைக்­கோள் தொட­ரில் உரு­வாக்­கப்­பட்ட முதல் செயற்கைக் கோள்தான் ஸ்கூப்-1.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!