18,000 பேருக்கு டெங்கி

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டில் இது­வரை கிட்­டத்­தட்ட 18,000 பேர் டெங்கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்டு எண்­ணிக்­கையைவிட மூன்று மடங்கு அதி­க­மாக இருக்­கிறது.

இந்த நிலை­யில், டெங்­கிக்கு எதி­ரான போராட்­டத்­தில் மேலும் ஓர் ஊக்­கு­விப்­பாக சமூ­கத் தலை­மை­யி­லான முயற்­சி­கள் இடம்­பெற இருக்­கின்­றன.

அந்த முயற்­சி­க­ளை­யொட்டி, டெங்கி காய்ச்­சலைத் தவிர்க்கும் வழி­க­ளைப் பற்­றி­யும் தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்­ளக்கூடிய வழி­கள் குறித்­தும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குப் போதிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் டெங்கி பிரச்­சினை இப்­போது பெரும் பிரச்­சி­னை­யாக இருக்­கிறது. இந்த ஆண்டு முதல் பாதி­யில் நாடு முழு­வ­தும் கிட்­டத்­தட்ட 389,000 பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டன.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் ஏறக்­கு­றைய 10,800 கொசு இனப்­பெ­ருக்க இடங்­க­ளைக் கண்­ட­றிந்­தது. அந்த இடங்­களில் கிட்­டத்­தட்ட பாதி இடங்­கள் வீடு­களில் காணப்­பட்­டன.

டெங்கி பாதிப்பு அதி­கம் உள்ள இடங்­களில் 60 விழுக்­காட்டு வீடு­களில் கொசு இனப்­பெ­ருக்­கத்­திற்­குத் தோதான இடங்­கள் இருந்­த­தா­கத் தெரிந்­தது.

மக்­கள் கழ­கத்­து­டன் சேர்ந்து இந்த வாரி­யம் கூட்டு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது. அதில் இந்த விவ­ரங்­களை வாரி­யம் தெரி­வித்­தது.

சென்ற மாதம் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்­தில் மொத்­தம் 1,173 பேருக்கு டெங்கி காய்ச்­சல் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அண்­மைய வாரங்­களில் டெங்கி காய்ச்­சல் கொஞ்­சம் குறைந்து வரு­கிறது. என்­றா­லும், அந்­தக் காய்ச்­சல் பர­வுவதற்­கான ஆபத்து இன்­னும் அதி­க­மா­கவே இருக்­கிறது.

நாடு முழு­வ­தும் 300க்கும் மேற்­பட்ட டெங்கி காய்ச்­சல் குழு­மங்­கள் இருக்­கின்­றன. வாரந்­தோ­றும் டெங்கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை இன்­ன­மும் அதி­க­மா­கவே இருக்­கிறது. 1,000க்கும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டு­

கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் டெங்கி கொசுக்­கள் தலை­வி­ரித்­தா­டும் கால­கட்­டத்­தின் தொடக்­கத்­தில்­தான் நாம் இப்­போது இருக்­கி­றோம் என்று வாரி­யம் எச்­ச­ரித்­தது.

டெங்­கிக்கு எதி­ரான போராட்­டத்தை சிங்­கப்­பூர் வேகப்­ப­டுத்தி வரு­கிறது. இந்த நிலை­யில், மக்­கள் கழக அடித்­தள அமைப்­பு­கள், மக்­கள் கழக சமூக அவ­ச­ர­கால உத­விக்­குழு அமைப்பு ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 5,000 தொண்­டூ­ழி­யர்­கள் இந்த வாரி­யத்­தின் எஸ்ஜி கிளின் இயக்­கத்

தூத­ர்­க­ளா­கச் சேர்­வார்­கள்.

அவர்­கள் அடுத்த வாரங்­களில் டெங்கி காய்ச்­சல் குழு­மம் காணப்­

ப­டக்­கூ­டிய பகு­தி­களில் இருக்­கும் வீடு­க­ளுக்­குச் சென்று சோத­னை­மேற்கொள்வர்.

கொசு இனப்­பெ­ருக்­கத்தை எப்­படி தவிர்ப்பது என்­பது பற்­றிய தக­வல்­க­ளைக் குடி­யி­ருப்­பா­ளர்

­க­ளு­டன் அவர்­கள் பகிர்ந்­து­கொள்­வார்­கள்.

அதோடு மட்­டு­மின்றி டெங்கி கொசுக்­க­ளி­டம் இருந்து எப்­படி தப்­பிப்­பது என்­பது பற்­றி­யும் அந்­தத் தொண்­டூ­ழி­யர்­கள் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு விளக்­கு­வார்­கள்.

இந்த வாரி­யத்­தின் அதி­கா­ரி­கள் ஏற்­கெ­னவே வீடு­க­ளுக்­கும் பல இடங்­க­ளுக்­கும் சென்று பரி­சோ­த­னை­களை நடத்தி வரு­கி­றார்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வே­ளை­யில், நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சுக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் பே யாம் கெங், மக்­கள் கழகத் தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் சேர்ந்து நேற்று பூன் லே டிரை­வில் இருக்­கும் பல வீடு­க­ளுக்­கும் சென்­றார்.

பாத்­தி­ரங்­களில் தண்­ணீர் தேங்­கா­மல் பார்த்­துக்­கொள்­ளும்­படி அவர் குடி­யி­ருப்­பா­ளர்­களிடம் வலி­யு­றுத்­தி­னார். முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­ப­டி­யும் கேட்­டுக்­கொண்­டார்.

இந்த வாரி­யம் மார்ச் 30ஆம் தேதி தேசிய டெங்கி தடுப்பு இயக்­கத்­தைத் தொடங்­கி­யது. அது முதல் அடித்­தள அமைப்­பு­கள் டெங்­கிக்கு எதி­ரான போராட்­டத்­திற்கு வலு­வான ஆத­ரவை வழங்கி வரு­கின்றன.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் புரிந்­து­ணர்வை அதி­கப்­ப­டுத்தி அதன்­மூ­லம் மேலும் பல அடித்­தள அமைப்­பு­கள் டெங்­கிக்கு எதி­ரான போராட்­டத்­தில் கலந்­து­கொள்ள முன்­வந்து இருக்­கின்­றன என்­றும் இந்த வாரி­யம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!