உக்ரேனில் தொடரும் ஏவுகணைத் தாண்டவம், மரண ஓலம்

மிகச் சக்தி வாய்ந்த வெடிப்பு

களால் உக்­ரே­னின் மைக்­கோ­லாவ் நகர் நேற்று அதி­காலை ஆட்­டங்­கண்­டது.

நக­ரில் உள்ள கட்­ட­டங்­

க­ளை ரஷ்யா பாய்ச்­சிய ஏவு­கணைகள் பதம் பார்த்­ததா­க­வும் குறைந்­தது 21 பேர் மாண்­ட­தா­க­வும் நக­ரின் மேயர் ஒலெக்­சாண்­டர் சென்­கெ­விச் தெரி­வித்­தார்.

கட்­ட­டங்­கள் இடிந்து விழுந்­த­போது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பல குடி­யி­ருப்­பா­ளர்­கள் மாண்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கருங்­க­டல் துறை­முக நக­ர­மான ஒடெசா­வில் உள்ள கட்­ட­டத்தை ரஷ்ய ஏவு­கணை

தகர்த்­தி­ய­தில் பலர் மாண்­ட­

தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மைக்­கோ­லாவ் நக­ரெங்­கும் எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பப்­பட்­டது.

“நக­ரைக் குறி­வைத்து ஏவு­கணை தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. வெளியே வரா­மல் பாது­காப்­பு­டன் இருக்க மக்­க­ளுக்­காக அமைக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் இருங்­கள்,” என்று அந்­ந­கர மக்­க­ளுக்கு சென்­கெ­விச் டெலி­கி­ராம் செயலி மூலம் தக­வல் அனுப்­பி­ னார்.

ரஷ்யா பாய்ச்­சிய ஏவு­கணை

களால் மைக்­கோ­லாவ் நகர் நிலை­கு­லைந்து, பல உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக உக்­ரே­னி­யத் தரப்பு தெரி­வித்­துள்­ளது. பொது­மக்­க­ளைக் குறி­வைத்து ரஷ்யா ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தாக உக்­ரேன் தொடர்ந்து குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கிறது. இந்­தக் கொடூ­ரத் தாக்­கு­தல்­களை ரஷ்யா வேண்­டு­மென்றே செய்­வ­தா­கக் கூறிய உக்­ரே­னிய அதி­பர் வெலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி, தாக்­கு­தல்­க­ளுக்­குக் கடும் கண்­ட­னம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், பொது­மக்­க­ளைக் குறி­வைத்­துத் தாக்­கு­தல் நடத்­தும் பழக்­கம் ரஷ்­யா­வுக்கு அறவே இல்லை என்று ரஷ்ய அர­சாங்­கத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் டிமிட்ரி பெஸ்­கோவ் அடித்­துக்­கூ­று­கி­றார்.

இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் ரஷ்யா பாய்ச்­சிய ஏவு­கணை உக்­ரே­னில் உள்ள கடைத்­தொ­கு­தியை தகர்த்­தி­ய­தில் குறைந்­தது 19 பேர் மாண்­ட­னர்.

போர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் மாண்­டு­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!