துப்பாக்கிச் சூடு: மூன்று காவல்துறை அதிகாரிகள் பலி

அமெ­ரிக்­கா­வின் கென்­டக்கி

மாநி­லத்­தில் நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்­டில் மூன்று காவல்­துறை அதி­கா­ரி­கள் மாண்­ட­னர்.

இந்­தத் தாக்­கு­த­லில் மேலும் ஐவர் காய­முற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­களில் நான்கு காவல்­துறை அதி­கா­ரி­களும் அவ­ச­ர­கால நிர்­வா­கப் பிரி­வைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வ­ரும் அடங்கு­வர்.

காவல்­து­றை­யைச் சேர்ந்த நாய் ஒன்­றும் சம்­ப­வத்­தில் மாண்­டது. காவல்­துறை அதி­கா­ரி­க­ளைச்

சுட்­டுக்­கொன்­ற­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 49 வயது ஆட­வர் கைது செய்யப்பட்டு தடுப்­புக் காவ­லில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெ­ரிக்க நேரப்­படி கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை 6.44 மணி அள­வில் துப்­பாக்­கிச்­சூடு நடந்­த தாக கென்­டக்கி மாநி­லத்­தின் ஆளு­நர் ஆண்டி பெஷி­யர் கூறி­னார்.

தமது வீட்­டைச் சுற்றி வளைத்த காவல்­துறை அதி­கா­ரி­களை நோக்கி துப்­பாக்­கிக்­கா­ரர் சர­மா­ரி­யா­கச் சுட்­டதாகக் காவல்­துறை அறிக்கை தெரி­வித்­தது. அந்த ஆட­வ­ரின் வீட்­டில் சோத­னை­யிட தகுந்த ஆவ­ணங்­க­ளு­டன் காவல்­து­றை­யி­னர் அங்கு சென்­றி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்த ஆட­வர் தமது குடும்­பத்­தாரை அடித்­துத் துன்­பு­றுத்­தி­ய­தாக புகார் அளிக்­கப்­பட்­டதை அடுத்து, அவ­ரது வீட்­டைச் சோத­னை­யிட்டு அவ­ரி­டம் விசா­ரணை நடத்த அதி­கா­ரி­கள் அங்கு சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அதி­கா­ரி­க­ளைத் துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொன்­றதை அடுத்து, அவ­ரது குடும்­பத்­தார் கேட்­டுக்­கொண்­ட­தற்கு இணங்க அந்த ஆட­வர் சர­ண­டைந்­த­தாக கென்­டக்கி

மாநி­லக் காவல்­துறை கூறி­யது.

இதை­ய­டுத்து, அவர் மறு­நாள் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார். காவல்­துறை அதி­கா­ரி ­க­ளைக் கொன்­ற­தாக தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை அவர் மறுத்­தார். துப்­பாக்­கிச் சூட்­டில் ஏற்­பட்ட மர­ணங்­க­ளால் கென்­டக்கி

மாநி­லக் காவல்­து­றைக்குப் பெரும் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக ஆளு­நர் பெஷி­யர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!