சமூகத் தோட்ட காய்கறிகள் சிரமப்படும் குடியிருப்புவாசிகளுக்கு விநியோகம்

அங் மோ கியோ வட்­டா­ரத்­தில் உள்ள சமூ­கத் தோட்­டங்­க­ளி­லும் பண்ணை

களி­லும் விளைந்த காய்­க­றி­கள், நிதிச் சிர­மத்தை எதிர்­நோக்­கும் செங் சான், சிலேத்­தார் வட்­டார குடி­யி­ருப்­பா­ளர்

களுக்கு வழங்­கப்­பட்­டன. குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட மறு­சு­ழற்சி மற்­றும் மறு­ப­ய­னீட்டு முயற்சி ­க­ளால் இந்­தக் காய்­கறி விளைச்­சல் சாத்­தி­ய­மா­னது.

செங் சான்-சிலேத்­தார் குடி­மக்­கள் ஆலோ­ச­னைக் குழு, குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் நேற்று முதன்­மு­த­லாக ஏற்­பாடு செய்த சமூக சுற்­றுச்­சூ­ழல் தினத்­தில் இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் பற்றி அங் மோ கியோ குடி­யி­ருப்­பா­ளர்­கள் தெரிந்­து­கொண்­ட­னர்.

சோங் பூன் ஈரச்­சந்தை மற்­றும் உணவு நிலை­யத்­தில் நடை­பெற்ற நிகழ்­வின் சிறப்பு விருந்­தி­ன­ராக பிர­த­மர் லீ சியன் லூங் கலந்­து­கொண்­டார்.

அந்த வட்­டா­ரத்­தைச் சுற்­றிப் பார்த்த பிர­த­மர், ஆங்­காங்கே இருந்த குடி­

யி­ருப்புவாசி­க­ளி­டம் பல்­வேறு பசு­மைத் திட்­டங்­கள் குறித்துப் பேசி­னார்.

தொடர்ந்து, அங்­கி­ருந்த சமூ­கத் தோட்­டம் ஒன்­றில் கத்­த­ரிக்­காய் செடியை அவர் நட்­டு­வைத்­தார்.

அங் மோ கியோ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாடியா அக­மது சம்­டின்னும் நிகழ்ச்­சி­யில் பிர­த­ம­ரு­டன் பங்கேற்றார். கொவிட்-19 கொள்­ளை­நோய் காலத்­தில் பொது­மக்­கள் பெரும்­பா­லும் தங்­க­ளது வீட்­டி­லேயே இருந்­த­தால் தோட்­டக்­கலை பற்றி அதி­கம் தெரிந்து, அதன் மீது நாட்­டம் கொண்­ட­தாக திரு­வாட்டி நாடியா கூறி­னார். நிகழ்­வில், உண­வுக்­க­ழி­வு­களை செடி­க­ளுக்கு உர­மாக்­கு­வது பற்றியும் விளக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!