சிஓஇ $110,000ஐ தாண்டலாம்

சென்ற மாதத்­தின் இரு ஏலங்­களில் சில வாக­னப் பிரி­வு­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்­கள் (சிஓஇ) 100,000 வெள்­ளி­யைக் கடந்த நிலை­யில், இது இன்­னும் அதி­க­மாகி ஆகஸ்ட் மாதத்­தில் 1994ஆம் ஆண்­டின் சாதனை அள­வான $110,500 என்­ப­தைத் தாண்­டக்­

கூ­டும் என வாகன வியா­பா­ரி­கள் கணிக்கின்றனர்.

ஆகஸ்ட் முதல் அக்­டோ­பர் வரைக்­கு­மான சிஓஇ விநி­யோ­கம் குறை­வாக இருக்­கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதால், 28 ஆண்டுகால சாத­னை­ய­ளவு கட்­ட­ண உயர்வு முறி­ய­டிக்­கப்­படும் நிலை உரு­வாகி உள்­ளது. அந்த வகை­யில், பெரிய கார்­க­ளுக்­கான சிஓஇ $115,000 முதல் $120,000 வரை உய­ர­லாம் என அவர்­கள் மதிப்­பி­டு­கின்­ற­னர்.

ஆண்­டி­று­திக்­குள் பெரிய கார்­க­ளுக்­கான சிஓஇ 10 விழுக்­காடு முதல் 20 விழுக்­காடு வரை­ உய­ரு­வ­தற்­குச் சாத்­தி­யமில்லை என்று ஒரு விநி­யோ­கிப்­பா­ளர் கூறு கி­றார்.

மேலும், சிறிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் இதே அள­வில் உயர்ந்­தால் அதனை அந்த கார் வாங்கு­ வோ­ரால் சமா­ளிக்க இய­லும் என்று சொல்­வ­தற்­கில்லை என்­றார் அவர்.

அதேநேரம், சிறிய கார்­க­ளுக்­கான சிஓஇ $90,000ஐத் தொட்­டால், அந்த கார்­க­ளுக்­கான தேவை இல்­லா­மல்­போய்­விட வாய்ப்பு உள்­ளது என்று பிர­பல கார் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

$74,989 என்­னும் தற்­போ­தைய சிஓஇ நில­வ­ரப்­படி, தனது நிறு­

வ­னத்­தின் ‘மிட்­சு­பிஷி எட்­ரேஜ்’ புதிய காரின் விலை, தள்­ளு­ப­டி­கள் போக, ஆகக் குறை­வாக $103,999 என்று கணக்­கி­டப்­ப­டு­

வ­தாக அவர் சொன்­னார்.

சிறிய, பெரிய கார்­க­ளுக்­கான சிஓஇ அதி­க­ரித்­தால், பெரிய கார்­களை வாங்க விரும்­பி­ய­வர்­கள் தங்­க­ளது விருப்­பத்­தைக் குறைத்து, சிறிய கார்­க­ளுக்கு மாறக்­கூ­டிய சாத்­தி­யம் இருப்­ப­தாக அந்­தப் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார். சிஓஇ உயர்ந்­து­கொண்டே சென்­றால் இந்த நிலை ஏற்­ப­ட­லாம் என்­றார் அவர்.

ஒரு வாக­னம் சாலைப் பயன்­பாட்­டி­லி­ருந்து அகற்­றப்­ப­டும்­போது புதிய காருக்­கான சிஓஇ வெளி­யி­டப்­ப­டு­கிறது. இந்த நடை­முறை 2018 பிப்­ர­வரி முதல் நடப்­பில் உள்­ளது. அந்த வகை­யில், தற்­போ­தைய மூன்று மாத காலத்­தில் வெளி­யே­றும் வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை அடுத்து வரும் மூன்று மாதங்­க­ளுக்­கான சிஓஇ ஒதுக்­கீட்டை தீர்­மா­னிக்­கும்.

ஆகஸ்ட் முதல் அக்­டோ­பர் வரைக்­கு­மான ஒதுக்­கீடு இந்த மாதத்­தில் வெளி­யி­டப்­பட உள்­ளது.

ஏப்­ரல், மே மாதங்­களில் வெளி­யி­டப்­பட்ட தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் பார்த்­தால் புதிய ஒதுக்­கீடு 20 விழுக்­காடு வரை குறை­வாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது.

ஜூன் மாத புள்­ளி­வ­ரங்­கள் இன்­னும் வெளி­யா­கா­த­தால் உத்­தே­ச­மாக இவ்­வாறு கணக்­கி­டப்

படு­கிறது.

வாடகை கார் சேவை நடத்­து­ வோரை சிஓஇ பாதிக்­காது என் கிறார் நன்­யாங் வர்த்­த­கப் பள்­ளி­ யின் முன்­னாள் இணைப் பேரா­சி­ரி­யர் டாக்­டர் ஜஃபார் மோமின். கார­ணம், அந்த உயர்வை வாட­கை­யின் மீது அவர்­கள் ஏற்றி

விடு­வர் என்­றார் அவர்.

மேலும், “சிஓஇ உயர்ந்­து­கொண்டே செல்­வ­தால் ஒரு வகை­யில் வாடகை கார் நிறு­வ­னங்­கள் பல­ன­டை­யக்­கூ­டும். சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கைக்கு எட்­டாத அள­வுக்கு கார் விலை­ விண்­ணோக்­கிப் பாயும்­போது பெரும்­பா­லா­ன­வர்­கள் சொந்­த­மாக கார் வாங்­கு­வ­தற்­குப் பதில் வாடகை காரை பயன்­

ப­டுத்­தும் நிலை ஏற்­படும் என அந்த நிறு­வ­னங்­கள் எதிர்­பார்க்­க­லாம்,” என்­றார் டாக்­டர் மோமின்.

ஆகப்­பெ­ரிய கார் பகிர்வு சேவை நடத்­தும் நிறு­வ­னங்­களில் ஒன்­றான ‘கெட்கோ’, தொடர்ந்து அதி­க­மான வாக­னங்­களை சேவை­யில் இணைத்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தது.

அடுத்து வர­வி­ருக்­கும் வாக­னங்­கள் தொடர்­பான நிகழ்­வுகள்­சிஓஇ தேவையை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று கவ­னிப்பாளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

ஆகஸ்ட்­டில் Cars@Expo ஜன­ வ­ரி­யில் Singapore Motorshow போன்ற மாபெ­ரும் கார் கண்­காட்­சி­கள் இந்­தத் தேவை­யைக் கூட்­டும் சாத்­தி­யம் உள்­ள­தா­கக் கூறப் படு­கிறது. மேலும், அக்டோபர் மாதம் பிஎம்டபிள்யூ நிறுவனம் கூடுதல் விநியோகிப்பாளரை நிய மிக்க உள்ளதால் அந்த காரின் விற்பனை அதிகரிக்கக்கூடும்.

28 ஆண்டுகால கட்டண உயர்வு விரைவில் முறியடிக்கப்படும் என கணிப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!