லாரன்ஸ் வோங்: தேவை ஏற்பட்டால் அரசாங்கம் கூடுதல் உதவிகளை வழங்கும்

அரசாங்கம் பணவீக்கத்தைத் தொடர்ந்து அணுக்கமாக கவனிக்கும் என்றும் தேவை ஏற்பட்டால், 6.6 பில்லியன் வெள்ளி உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை மேம்படுத்தும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் பொருள் சேவை வரியை திட்டமிட்டபடி அரசாங்கம் உயர்த்தி ஆக வேண்டும் என்று திரு வோங் வலியுஸத்தினார்.

நிதி அமைச்சருமான திரு வோங், திங்கட்கிழமை (ஜூலை 4) அன்று நாடாளுமன்றத்தில் மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

பணவீக்கம், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றைச் சமாளிக்க அரசாங்கம் அறிவித்துள்ள உதவித் திட்டங்கள் போதுமானவையா என்று பல மன்ற உறுப்பினர்கள் கேட்டிருந்தனர்.

பணவீக்கம் இந்தக் காலக்கட்டத்தில் உயரக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் வரையப்பட்டதாக திரு வோங் விளக்கினார்.

உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தை கடந்த 2020ஆம் ஆண்டு துணைப் பிரதமரும் அப்போதைய நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியன் வெளியிட்டார்.

கடந்த மாதம், 1.5 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை திரு லாரன்ஸ் வோங் அறிவித்தார்.

பொருளியல் நிலைமை மேலும் பெருமளவில் மோசமானால், நாங்கள், குறிப்பாக குறைந்தத சம்பளக்காரர்களுக்கு, கூடுதல் உதவிகள் செய்யத் தயாராய் உள்ளது என்று வாக்கு கொடுக்கிறேன்.
லாரன்ஸ் வோங்
துணைப் பிரதமர், நிதி அமைச்சர்

இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் உயரும் என்று ஏற்கனவே எதிர்பார்த்ததால் தான் பொருள் சேவை வரியை இரண்டு கட்டங்களில் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வரும் 2023 ஜனவரியிலிருந்து பொருள் சேவை வரி ஒரு விழுக்காடு உயர்ந்து எட்டு விழுக்காடாகும். 2024 ஜனவரியிலிருந்து மேலும் பொருள் சேவை வரி ஒரு விழுக்காடு உயர்த்தப்பட்டு 9 விழுக்காடு ஆகும்.

பொருள் சேவை வரி உயர்வை சிங்கப்பூர் இனியும் தள்ளிவைக்க முடியாது என்று நிதி அமைச்சர் கூறினார்.

எண்ணிக்கையில் அதிகரித்து வரும் முதியவர்களை நன்கு பராமரிக்கவும் உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கவும் பொருள் சேவை வரி உயர்வு தேவை என்று விளக்கினார் திரு வோங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!