'மலேசியாவின் கோழி ஏற்றுமதித் தடை எப்போது நீக்கப்படும் என்று தகவல் கிடைக்கவில்லை'

மலேசிய அரசாங்கம் கோழி ஏற்றுமதித் தடை எப்போது நீக்கப்படும் என்று சிங்கப்பூரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.

மார்சிலிங்-யூ டி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம், சிங்கப்பூர் உணவு அமைப்புக்கு இது பற்றி ஏதாவது தகவல் கிடைத்துள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த திருவாட்டி ஃபூ, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு பற்றி விளக்கிப் பேசினார்.

உணவு விநியோகம் தடைபடும் ஆபத்தைச் சமாளிக்க அரசாங்கம் பலமுனைக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.

இருப்பினும் உலகளாவிய அரசியல் பதற்றம், மோசமான பருவநிலை, பிற அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விநியோகத் தடைகளை சிங்கப்பூரால் முழுமையாகத் தடுக்க முடியாது என்று அமைச்சர் கூறினார்.

புலாவ் உபின் போன்ற மற்ற தீவுகளை கோழி வளர்க்கவும் வேளாண் துறைக்கும் பயன்படுத்துவது பற்றி நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு பரிசீலித்து வருகிறதா என்றும் திருவாட்டி ஃபூவிடம் கேட்கப்பட்டது.

அத்தகைய யோசனைகள் முவைக்கப்பட்டிருப்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரின் உணவுத் தேவைகளில் கணிசமான பங்கை நாமே பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திருவாட்டி ஃபூ கூறினார்.

தேவையான நேரத்தில் நமக்கு உதவும் உற்பத்தி அறிவுத் திறனும் சிங்கப்பூரின் முக்கிய நிலப்பரப்பும் நமக்கிருப்பதை உறுதி செய்ய திறன்களை பெருக்க வேண்டும் என்றார் அவர்.

ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான நிலப்பரப்பே வேளாண் உணவுத் தயாரிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது சவாலாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!