டென்மார்க் கடைத்தொகுதி துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி; ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு

டென்­மார்க் தலை­ந­கர் கோபன்­ஹே­க­னில் உள்ள ஒரு கடைத்­தொகு­தி­யில் நேற்று முன்­தி­னம் ஆடவர் ஒரு­வர் துப்­பாக்­கி­யால் கண்­மூ­டித்­த­ன­மாகச் சுட்­ட­தில் குறைந்­தது மூவர் மாண்­ட­னர்; நால்வர் காய­முற்­ற­னர்.

இச்­சம்­ப­வம் டென்­மார்க் மக்­களை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யது. இதன் தொடர்­பில் 22 வயது ஆடவர் ஒரு­வ­ரை டென்மார்க் காவல்­துறை கைது­செய்­தது. பின்­னர் அவர்­மீது நீதி­மன்­றத்­தில் கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

தங்­க­ளது அழ­கான, பாது­காப்­பான தலை­நகரம் நொடி­யில் மாறி­விட்­டது என்று டென்­மார்க் பிர­தமர் மெட் ஃபிரடெ­ரிக்­சன் ஓர் அறிக்கை மூல­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தக் கடி­ன­மான வேளை­யில் அனை­வ­ரும் ஒன்­றா­கக் கைகோத்து, ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஆத­ர­வாக இருக்­கும்­படி தன் நாட்டு மக்­க­ளுக்குப் பிரதமர் ஃபிரடெரிக்சன் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

துப்­பாக்­கிச்­சூட்டைப் பயங்­க­ர­வா­தத்­து­டன் தொடர்பு­ப­டுத்த எந்த அறி­கு­றி­யும் இல்லை என்­றும் சந்­தே­கப் பேர்­வ­ழிக்கு மன­ந­லப் பிரச்­சி­னை­கள் உள்­ளன என்­றும் கோபன்­ஹே­கன் காவல்­து­றைத் தலை­வர் சோரன் தோமா­சன் தெரி­வித்­தார்.

இறந்­த­வர்­க­ளுள் டென்­மார்க்­கைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்­ணும் அடங்­கு­வர். அவ்­வி­ரு­வ­ருக்­கும் வயது 17. இன்­னொ­ரு­வர் 47 வய­தான ரஷ்யக் குடி­ம­கன் என்­றும் அவர் டென்­மார்க்­கில் வசித்­து­வந்­தார் என்­றும் திரு தோமா­சென் குறிப்­பிட்­டார்.

தாக்­கு­தல் தொடர்­பில் உறு­திப்­படுத்­தப்­ப­டாத ஒரு காணொளி இணை­யத்­தில் வலம் வரு­கிறது.

அக்­கா­ணொ­ளி­யைப் படம்­பிடித்­த­த­கா­கக் கூறப்­படும் மஹ்தி அல் வாஸ்னி, "அவர் மூர்க்­கத்­த­ன­மா­க­வும் கண்­ட­படி சத்­த­மிட்­ட­தா­க­வும் தோன்­றி­யது," என்று சொன்­ன­தாக 'பிடி' எனும் டென்­மார்க் ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

"மக்­கள் முத­லில் அவ­னைத் திரு­டன் என்றே நினைத்­த­னர். திடீ­ரென துப்­பாக்­கி­யால் சுடும் சத்­தம் கேட்­ட­தும், அங்­குள்ள ஒரு கடை முகப்­பின் பின்­னால் ஒளிந்­து­கொண்­டேன். துப்­பாக்­கிக்­கா­ரன் கூட்­டத்தை நோக்­கிக் கண்­ட­படி சுட்­டான்," என்­றார் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி ரிக்கி லெவண்­டோவ்ஸ்கி.

இத­னி­டையே, தனக்­கெ­தி­ரா­கப் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல் இருப்­ப­தா­க­வும் அத­னைத் தீவி­ர­மாக எடுத்­துக்­கொண்­டுள்­ள­தா­க­வும் டென்­மார்க் தெரி­வித்­துள்­ளது. கடை­சி­யாக, 2015ஆம் ஆண்டு அங்கு நடந்த பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­லில் இரு­வர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!