இந்தியாவின் ‘தேஜஸ்’ போர் விமானத்தை வாங்க மலேசியா ஆர்வம்

ஒப்பந்தத்தை இறுதிசெய்ய மலேசியக் குழு விரைவில் இந்தியா செல்லும் என எதிர்பார்ப்பு

இந்­தி­யா­வி­டம் இருந்து 'தேஜஸ்' இலகு ரக போர் விமா­னங்­களை வாங்க மலே­சியா பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக இந்­திய ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

பல்­லாண்­டு­கா­ல­மா­கத் தான் பயன்­ப­டுத்­தி­வ­ரும் மிக்-29 ரக போர் விமா­னங்­க­ளைச் செயல்­பாட்­டில் இருந்து அகற்ற மலே­சியா முடி­வு­செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதற்­குப் பதி­லாக, இந்­தியா தயா­ரிக்­கும் தேஜஸ் விமா­னங்­களை வாங்க அந்­நாடு ஆர்­வம் காட்­டு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

"இது தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தை­கள் கிட்­டத்­தட்ட இறு­திக்­கட்­டத்­தில் உள்­ளன," என்று இந்­துஸ்­தான் ஏரோ­நாட்­டிக்ஸ் லிமி­டெட் நிறு­வ­னத்­தின் தலை­வ­ரும் நிர்­வாக இயக்­கு­ந­ரு­மான ஆர் மாத­வன் கூறி­ய­தாக 'இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' செய்தி வெளி­யிட்­டு இருக்கிறது.

எத்­தனை விமா­னங்­களை மலே­சியா வாங்­கும் என்ற விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இந்த ஒப்­பந்­தத்தை இறு­தி­செய்­வ­தற்­காக மலே­சிய உயரதி­கா­ரி­கள், வல்­லு­நர்­கள் அடங்­கிய குழு விரை­வில் இந்­தி­யா­விற்கு வரும் என்று எதிர்­பார்ப்­ப­தா­கத் திரு மாத­வன் கூறி­னார்.

மலே­சி­யா­வின் சுகோய் எஸ்யு- 30 ரக விமா­னங்­களின் பரா­ம­ரிப்பு, பழு­து­பார்ப்­புப் பணி­களில் உத­வ­வும் இந்­தியா முன்­வந்­துள்­ளது.

இத­னால், உக்­ரேன் போரால் ரஷ்­யா­மீது விதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளி­யல் தடை­க­ளால் ரஷ்­யத் தயா­ரிப்­பான சுகோய் எஸ்யு-20 விமா­னங்­க­ளுக்­கான உதிரி பாகங்­க­ளைக் கொள்­மு­தல் செய்­வ­தில் நில­வும் பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்­க­வும் இது உத­வும் என்று திரு மாத­வன் குறிப்­பிட்­டார்.

மேலும், இப்­போது இந்­திய விமா­னப் படைக்கு வழங்­கி­வ­ரும் அதே தரத்­தி­லான சேவையை மலே­சி­யா­விற்­கும் வழங்குவோம் என்­றும் அவர் உறு­தி­ய­ளித்­தார்.

இந்­திய விமா­னப் படை கடந்த ஆண்டு பிப்­ர­வரியில் 83 தேஜஸ் விமா­னங்­களை 'எச்ஏஎல்' நிறு­வனத்­தி­டம் இருந்து வாங்­கி­யது.

இந்­தி­யா­வின் தேஜஸ் விமா­னத்­தைத் தெரி­வு­செய்­யு­முன், சீனா­வின் ஜேஎஃப்-17 ஜெட், தென்­கொ­ரி­யா­வின் எ­ஃப்ஏ-50, ரஷ்­யா­வின் மிக்-35 மற்­றும் யாக்-130 ஆகிய போர் விமானங்களை மலேசியா பரிசீலனை செய்தது என்று திரு மாதவன் சொன்னார்.

சீன விமானத்தின் விலை குறைவு என நம்பப்பட்டாலும், தேஜஸ் எம்கே-1ஏ5 விமானத்தின் தொழில்நுட்பக் கூறுகளுக்கு அது ஈடாக முடியாது என்றார் அவர்.

இதனிடையே, தேஜஸ் எம்கே-2 மற்றும் 5ஆம் தலைமுறை நடுத்தரப் போர் விமானத்தை உருவாக்கும் பணிகளிலும் 'எச்ஏஎல்' ஈடுபட்டு இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!