ஆண்டுதோறும் அதிகபட்சம் 3,800 பாதுகாப்பற்ற வேலை நடைமுறை புகார்கள்

கடந்த ஐந்தாண்டுகளில் பாதுகாப்பற்ற வேலை நடைமுறை குறித்து ஆண்டுதோறும் 2,400லிருந்து 3,800 புகார்கள் மனிதவள அமைச்சிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமையன்று (4 ஜூலை) மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அதைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு புகாரையும் மனிதவள அமைச்சு முழு கவனத்துடன் கருத்தில்கொள்வதாகவும் தேவைப்படும்போதெல்லாம் வேலையிடங்களைச் சோதனையிடுவதாகவும் டாக்டர் டான் எழுத்து வடிவில் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தினார்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட 84 விழுக்காட்டு சோதனைகளைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது; அபராதங்கள் விதிக்கப்பட்டன, வேலையை நிறுத்துவதற்கான உத்தரவுகள் விடுக்கப்பட்டன.

இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டுமான, உற்பத்தி போன்ற அபாயம் அதிகம் உள்ள துறைகளில் 3,500க்கும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைவிட 35 விழுக்காடு அதிகம்.

பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்ட 9,000க்கும் அதிகமான சம்பவங்களின் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது, வேலையை நிறுத்துமாறு 50க்கும் அதிகமான உத்தரவுகள் விடுக்கப்பட்டன.

இந்த எண்ணிக்கைகள், சென்ற ஆண்டு முற்பாதியில் பதிவானதில் இரு மடங்கு.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா, அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் லியோன் பெரேரா ஆகியோரின் கேள்விகளுக்கு டாக்டர் டான் பதிலளித்தார்.

இவ்வாண்டு முற்பாதியில் வேலையிடங்களில் 28 பேர் மாண்டதைத் தொடர்ந்து வேலையிடப் பாதுகாப்பு தொடர்பிலான புள்ளி விவரங்களை அவர்கள் கேட்டனர்.

2016ஆம் ஆண்டு முற்பாதிக்குப் பிறகு இவ்வாண்டு முற்பாதியில்தான் இத்தனை வேலையிட மரணங்கள் பதிவாயின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!