வெளிநாட்டு தலையீடு சட்டம் 7ஆம் தேதி நடப்புக்கு வரும்

சிங்கப்பூரின் உள்நாட்டு அரசியலிலும் சமூகத்திலும் தலையிடுவதற்காக வெளிநாட்டு தரப்புகள் செய்யும் முயற்சிகளை எதிர்கொள்ளும் புதிய சட்டம் வியாழக்கிழமை (ஜூலை 7) அன்று நடப்புக்கு வருகிறது.

ஃபிக்கா (Fica) எனும் வெளிநாட்டு தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டம் சிங்கப்பூருக்கு விரோதமான தகவல்களைப் பரப்பும் இயக்கங்களை முறியடிக்க விழைகிறது.

உள்நாட்டு அமைச்சு புதன்கிழமை (ஜூலை 6) இன்று அதைத் தெரிவித்தது.

ஃபிக்கா சட்டத்தை நாடாளுமன்றம் கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்றுக்கொண்டது.

அதன்கீழ், சிங்கப்பூரின் உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தரப்புகள் தலையிட செய்யும் முயற்சிகளை விசாரிக்க, சிங்கப்பூர் அரசாங்கம் இனி சமூக ஊடகத் தளங்களுக்கும் உத்தரவிடலாம்.

போலியான கணக்குகள் அல்லது போட் எனப்படும் இணைய தானியங்கி மென்பொருள்களைப் பயன்படுத்துவது இந்த முயற்சிகளில் அடங்கும்.

சிங்கப்பூரின் அரசுரிமையை கீழறுத்து சமூகப் பதற்றத்தை மூட்டும் குறிக்கோளுடன், சில குறிப்பிட்ட கருத்துகளுக்கு பலத்த ஆதரவையோ எதிர்ப்பையோ போலியாக உருவாக்க இந்த கணக்குகளும் மென்பொருள்களும் முயலும்.

மேலும், அமைச்சர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற அரசியல் நபர்கள், அமைப்புகள், அல்லது உள்நாட்டுப் பிரதிநிதிகள் மூலம் வரும் வெளிநாட்டு தலையீடுகளை எதிர்கொள்ளவும் ஃபிக்கா சட்டத்தில் நடவடிக்கைகள் உண்டு.

அவை பின்னர் நடப்புக்கு வரும் என்றது உள்நாட்டு அமைச்சு.

ஃபிக்கா சட்டம் தேவை என்றும் அமைச்சு மீண்டும் வலியுறுத்தியது.

இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றால் வெளிநாட்டுத் தலையீடு ஏற்படும் சாத்தியமும் அந்த ஆபத்தின் கடுமையும் அதிகரித்துள்ளது என்று அது கூறியது.

“இந்தத் தளங்களால் விரோதப் போக்குள்ள வெளிநாட்டுத் தரப்புகள் இன்னும் எளிதாகவும், இன்னும் சூதுடனும் தண்டனையிலிருந்து தப்பித்தும் செயல்பட உதவுகின்றன,” என்று உள்நாட்டு அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!