இன்று நடப்பிற்கு வருகிறது

சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுக்கும் சட்டம்

சிங்­கப்­பூ­ரின் உள்­நாட்டு அர­சி­ய­லில் அந்நிய சக்­தி­கள் தலை­யி­டு­வ­தைத் தடுக்­கும் 'ஃபிக்கா' எனப்­படும் வெளி­நாட்­டுத் தலை­யீடு (எதிர்­ந­ட­வ­டிக்­கை­கள்) சட்­டம் இன்­று­மு­தல் நடப்­பிற்கு வரு­வ­தாக உள்­துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரின் உள்­நாட்டு அர­சி­ய­லில் அந்­நிய சக்­தி­க­ளின் குறுக்­கீட்டு முயற்­சி­கள் குறித்து விசா­ரணை நடத்­து­மாறு சமூக ஊட­கத் தளங்­க­ளுக்­கும் இணைய சேவை வழங்கு­நர்­க­ளுக்­கும் அதி­கா­ரி­கள் உத்­த­ர­விட முடி­யும்.

பொய்க்­க­ணக்­கு­கள், 'போட்' எனப்­படும் இணைய இயந்­திர மனி­தர்­கள் உள்­ளிட்­டவை மூலம் பொது­மக்­கள் இடையே குறிப்­பிட்ட கண்­ணோட்­டங்­களை ஆத­ரிப்­பது அல்­லது எதிர்ப்­பது போன்ற தவ­றான தோற்­றத்தை உரு­வாக்கி, சமூ­கத்­தில் பதற்­றத்தை ஏற்­படுத்­த­வும் சிங்­கப்­பூ­ரின் இறை­யாண்­மை­யைக் கீழ­றுக்­க­வும் அந்த வெளிநாட்டுச் சக்­தி­கள் முய­ல­லாம்.

அத்­த­கைய எதிர்ப்­புத் தக­வல் பிர­சாரங்­களை முறி­ய­டிக்­கும் அம்­சங்­களை 'ஃபிக்கா' சட்­டம் கொண்­டி­ருக்­கும். இச்­சட்­டத்­திற்­குக் கடந்த அக்­டோ­ப­ரில் நாடாளு­மன்­றம் ஒப்­பு­தல் அளித்­தது.

உள்­ளூ­ரில் மாற்­றாள்­கள் அல்­லது அமைச்­சர்­கள், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் போன்ற அர­சி­யல் சார்ந்த நபர்­கள் அல்­லது அமைப்­பு­கள் மூல­மாக வரும் அந்­நி­யத் தலை­யீ­டு­களை எதிர்­கொள்­ளும் வழி­வகை­க­ளை­யும் இச்­சட்­டம் கொண்­டுள்­ளது. இந்த வழி­வ­கை­கள் பின்­னொரு நாளில் நடப்­பிற்கு வரும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

இணை­யத்­தா­லும் சமூக ஊட­கங்­களா­லும் ஆற்­ற­லி­லும் தீவி­ரத்­தி­லும் வெளி­நாட்­டுத் தலை­யீடு அச்­சு­றுத்­தல் அதி­க­ரித்து இருப்­ப­தாகக் கூறி, 'ஃபிக்கா' சட்­டத்­தின் தேவையை அமைச்சு வலி­யுறுத்தி­யுள்­ளது.

கடந்த 2018ஆம் ஆண்­டில் இன்­னொரு நாட்­டு­டன் இரு­த­ரப்­புப் பிரச்­சி­னை­க­ளைச் சிங்­கப்­பூர் எதிர்­கொண்­ட­போது, சிங்­கப்­பூ­ரைக் குறை­கூறி சமூக ஊட­கங்­களில் அள­விற்கு அதி­க­மா­கக் கருத்­து­கள் பதி­வி­டப்­பட்­டதை அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது.

போலி­யான கணக்­கு­கள் மூலம் பதி­வி­டப்­பட்ட அக்­க­ருத்­து­கள், சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பா­டு­க­ளுக்கு எதி­ரான வகை­யில் செயற்­கை­யா­ன­தொரு தோற்­றத்தை உரு­வாக்க முனைந்­தன என்று அமைச்சு தெரி­வித்­தது.

இதே­போல், 2016-2017ஆம் ஆண்­டு­களுக்கு இடையே இன்­னொரு நாட்­டு­ட­னான பதற்­ற­மான கால­கட்­டத்­தில், சிங்­கப்­பூ­ரின் வெளி­நாட்­டுக் கொள்கை நிலைப்­பாட்­டைக் கீழ­றுக்­கும்­ப­டி­யான ஒருங்­கி­ணைந்த எதிர்ப்­புத் தக­வல் பிர­சா­ரத்­தை­யும் சிங்­கப்­பூர் எதிர்­கொண்­ட­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

பல்­லாண்­டு­க­ளா­கச் செயல்­ப­டா­தி­ருந்த சமூக ஊட­கக் கணக்­கு­கள் மூலம் இணைய வரு­ண­னை­களும் காணொ­ளி­களும் பதி­வேற்­றப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

"அந்­தக் கருத்­து­கள் உரை­யா­டல் செய­லி­கள் வழி­யா­க­வும் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு, சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இடையே உணர்­வு­பூர்­வ­மா­கத் தாக்­கத்தை ஏற்­படுத்த முயன்­றன," என்று அமைச்சு விளக்­கி­யது.

உள்­ளூர் மாற்­றாள்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், அர­சி­யல் சார்ந்த முக்­கிய நபர்­களா­கக் கரு­தப்­ப­டு­வோர், 'ஃபிக்கா' சட்டத்தின்­கீழ் சில அடிப்­ப­டைக் கட­மை­கள் மற்­றும் எதிர்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கு இணங்கி நடக்க வேண்­டும்.

அவர்­கள் $10,000 அல்­லது அதற்­கு­மேல் நன்­கொடை பெற்­றால், அது­பற்றி உரிய அமைப்­பி­டம் தெரி­விக்க வேண்­டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர், மக்­கள் சந்­திப்பு நேரம் அல்­லது மக்­க­ளைச் சென்­ற­டை­யும் நட­வ­டிக்­கை­க­ளின்­போது வெளி­நாட்­ட­வர்­க­ளைத் தொண்­டூ­ழி­யம் புரிய அனு­ம­திக்­கக்­கூ­டாது.

'ஃபிக்கா' வழி­காட்­டு­தல்­கள் வழங்­கப்­பட்­ட­வர்­கள் அதனை மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு உள்­துறை அமைச்­சி­டம் விண்­ணப்­பிக்­க­லாம். அதன்­பி­றகே அவர்­கள் மறு­ஆய்­வுத் தீர்ப்­பா­யத்­தி­டம் முறை­யிட இய­லும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!