தொடரும் பதவி விலகல்; பிரிட்டிஷ் பிரதமர் ஜான்சனுக்கு நெருக்கடி

பிரிட்­டிஷ் நிதி­ய­மைச்­சர் ரிஷி சுனக், சுகா­தார அமைச்­சர் சாஜித் ஜாவித் ஆகி­யோர் நேற்று முன்­தி­னம் பதவி வில­கிய நிலை­யில், மேலும் பல அமைச்சர்களும் அவர்களின் உதவியாளர்களும் தங்களது பதவிகளைத் துறந்தனர்.

இத­னால், பிர­த­மர் போரிஸ் ஜான்­ச­னுக்­குக் கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. எந்­நே­ர­மும் அவ­ரது பதவி பறி­போ­கக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பாலி­யல் புகா­ரில் சிக்­கிய நாடாளு­மன்ற உறுப்­பி­னர் கிறிஸ் பிஞ்­சரை முக்­கிய அர­சாங்­கப் பத­வி­யில் பிர­த­மர் ஜான்­சன் நிய­மித்­த­தற்­குக் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது. இதை­ய­டுத்து, அந்த எம்.பி. கடந்த வாரம் அந்­தப் பொறுப்­பி­லி­ருந்து வில­கி­னார்.

இந்­நி­லை­யில், அந்த எம்.பி.யை முக்­கி­யப் பத­வி­யில் நிய­மித்­தது தவ­று­தான் என்று கூறி, அதற்கு நேற்று முன்­தி­னம் மன்­னிப்­பும் கேட்­டார் திரு ஜான்­சன்.

ஆனா­லும், பிர­த­மர் ஜான்­ச­னின் தலை­மைத்­து­வத்­தின்­மீது இனி­மே­லும் தங்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லை எனக் கூறி, அடுத்த சில நிமி­டங்­களி­லேயே நிதி­ய­மைச்­சர் பொறுப்­பி­லி­ருந்து திரு சுனக்­கும் சுகா­தார அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து திரு ஜாவித்­தும் வில­கு­வ­தாக அறி­வித்­தனர்.

நேற்று மாலை நில­வ­ரப்­படி, அமைச்­சர்­கள், அவர்­க­ளின் உதவி­யா­ளர்­கள் உட்­பட மொத்­தம் 27 பேர் பதவி வில­கி­விட்­ட­தாக பிபிசி செய்தி தெரி­வித்­தது.

ஆனா­லும், தமக்­குப் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு இருப்­ப­தாக பிர­த­மர் ஜான்­சன் நம்­பு­கி­றார் என்று அவ­ரு­டைய செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­னார்.

தமக்கு எதி­ராக இன்­னொரு நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­டா­லும் அதனை எதிர்­கொள்­ளப் பிர­த­மர் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

கடந்த மாத­மும் பிர­த­மர் ஜான்­ச­னுக்கு எதி­ராக ஒரு நம்­பிக்­கை­ இல்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வரப்பட்­டது.

அப்­போது, அவருக்கு ஆதரவாக 211 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து, திரு ஜான்சனின் தலைமைத்துவம் மீதான தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அவருக்கு எதிராக 148 பேர் வாக்களித்தனர்.

ஆனா­லும், திரு ஜான்சனை முன்பு ஆத­ரித்த நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­களில் சிலர், இப்­போது எதிராகத் திரும்பியுள்ளனர்.

இத­னி­டையே, புதிய நிதி­ அமைச்­ச­ராக திரு நதீம் ஸகா­வி­யும் புதிய சுகா­தார அமைச்­ச­ராக ஸ்டீவ் பார்க்­லே­யும் நிய­மிக்­கப்­பட்டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!