துணைப் பிரதமர் - இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் டாக்டர் எஸ்.ஜெய்­சங்­கர், சிங்கப்பூரில் நேற்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்­கை­யும் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென்­னை­யும் பேசி­னார்.

இது குறித்து தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ள திரு ஜெய்­சங்­கர், "சிங்­கப்­பூர் துணைப் பிர­த­ம­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு லாரன்ஸ் வோங்­கைச் சந்­தித்­த­தில் மகிழ்ச்சி. இந்­தியா-சிங்­கப்­பூர் இடை­யி­லான இரு­த­ரப்­புப் பங்­கா­ளித்­துவத்தை அடுத்த நிலைக்­குக் கொண்­டு­செல்­வது குறித்து கலந்­து­ரை­யா­டி­னோம். உல­க­ளா­விய அர­சி­யல், பொரு­ளி­யல் சூழல்­கள் குறித்­தும் கருத்­து­க­ளைப் பகிர்ந்து­கொண்­டோம்," என்று தெரி­வித்­து இருக்கிறார்.

பின்­னர் தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங்­கு­டன் சேர்ந்து நண்­பகல் உண­வ­ருந்­தி­யது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்த டாக்­டர் ஜெய் சங்­கர், அவ­ரது நுண்­ண­றி­வில் இருந்­தும் கண்­ணோட்­டங்­களில் இருந்­தும் எப்­போ­தும் பயனடை­வதா­க­வும் குறிப்­பிட்­டார்.

டாக்­டர் ஜெய்­சங்­க­ரு­ட­னான சந்­திப்பு குறித்து துணைப் பிர­த­மர் வோங்­கும் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

"இந்­தி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் நெருக்­க­மான, நீண்­ட­கால நண்­பர்­கள். இரு­நா­டு­களும் பல்­வேறு துறை­க­ளி­லும் வலு­வான உற­வைக் கொண்­டுள்­ளன. இன்று (நேற்று) காலை இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் ஜெய்­சங்­க­ரைச் சந்­தித்­துப் பேசி­யதில் மகிழ்ச்சி. இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு குறித்­தும் புவி­சார் அர­சி­யல் சூழல்­கள் குறித்­தும் விரி­வா­கக் கலந்­து­ரை­யா­டி­னோம்," என்று திரு வோங் கூறி­யுள்­ளார்.

கடந்த 2020-21ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வின் ஆறாவது பெரிய வர்த்தகப் பங்­கா­ளி­யாக சிங்­கப்­பூர் திகழ்ந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!