தாங்கிப் பிடித்த கைகள் விலகின; போரிஸ் ஜான்சன் பதவி விலகல்

பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் நேற்று பதவி வில­கி­னார். புதிய பிர­த­ம­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் வரை அவர் இடைக்­கா­லப் பிர­த­

ம­ரா­கச் செயல்­ப­டு­வார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. வரும் அக்டோபர் மாதம் வரை அவர் அப்பதவியில் இருப்பார்.

தமது பத­வி­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள கடந்த சில நாள்­

க­ளாக 58 வயது திரு ஜான்­சன் மிகக் கடு­மை­யா­கப் போரா­டி­னார். ஆனால் இவ்­வ­ளவு காலம் தமக்கு ஆத­ர­வாக இருந்த சில­ர் கைவிட்டதை அடுத்து, பதவி

வில­கு­வ­தைத் தவிர அவ­ருக்கு வேறு வழி­யில்­லா­மல் போனது.

புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட அமைச்­சர்­கள் பதவி வில­கி­யதை அடுத்து, திரு ஜான்­ச­னின் மூன்று ஆண்­டு­கால ஆட்சி முடி­வுக்கு வந்­தது. திரு ஜான்­சன் மீது உள்ள அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில் நேற்று எட்டு அமைச்­சர்­கள் பதவி வில­கி­னர். இதன் விளை­வாக திரு ஜான்­சன் தலை­மை­யி­லான அர­சாங்­கம் முடங்­கி­யது.

"புதிய தலை­மைத்­து­வத்­துக்­குக் கட்சி விருப்­பம் தெரி­வித்­துள்­ளது. புதிய தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் பணி­கள் தற்­போது தொடங்­கும். 2019ஆம் ஆண்­டில் கன்­சர்­வேட்­டிவ் கட்­சிக்கு வாக்­க­ளித்த மில்­லி­யன் கணக்­கான பிரிட்­டிஷ் மக்­க­ளுக்கு என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அவர்­களில் பலர் முதல்­மு­றை­யாக கன்­சர்­வேட்­டிவ் கட்­சிக்கு வாக்­க­ளித்­த­னர். எனது அர­சாங்­கத்­தின் செயல்­

பா­டு­களை நினைத்து பெருமை அடை­கி­றேன்.

"பிரெக்­சிட் விவ­கா­ரத்தை நல்­ல­படி முடித்து வைத்­தது, கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை எதிர்­கொண்­டது, உக்­ரேன் மீது படை­யெ­டுத்த ரஷ்ய அதி­பர் விளா­டி­மர் புட்­டி­னுக்கு எதி­ராக அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­யது அவற்­றில் அடங்­கும்.பாதி வழி­யில் பதவி வில­கும் நிலை ஏற்­பட்­டி­ருப்­பது வேத­னை­யைத் தரு­கிறது," என்று திரு ஜான்­சன் தமது பிரி­யா­விடை உரை­யின்­போது தெரி­வித்­தார். உல­கின் ஆகச் சிறந்த பணி­யி­லி­ருந்து வில­கு­வது தம்மை துய­ரில் ஆழ்த்­தி­இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

இருப்­பி­னும், தற்­போது

பிரிட்­டன் இருண்ட காலத்தை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருப்­பது போலத் தோன்­றி­னா­லும் எதிர்­கா­லம் ஒளி­ம­ய­மாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இதை­ய­டுத்து கன்­சர்­வேட்­டிவ் கட்சி அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களில் தீவி­ரம் காட்­டி­வ­ரு­கிறது.

"கட்­சி­யினர் உட­ன­டி­யாக

ஒன்­றி­ணைந்த முக்­கி­ய­மான விவ­கா­ரங்­களில் கவ­னம் செலுத்த வேண்­டும். சவால்­மிக்க கால­

கட்­டத்தை நாங்­கள் எதிர்­கொள்­கி­றோம்," என்று கன்­சர்­வேட்­டில் கட்­சி­யின் துணைத் தலை­வர் ஜஸ்­டின் டாம்­லின்­சன் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார். பிரிட்­டிஷ் அர­சி­யல் வர­லாற்­றில் நேற்­றைய தினம் மிக­வும் கொந்­த­ளிப்­பான 24 மணி நேர­மாக அமைந்­த­தாக அந்­நாட்டு ஊட­கம் கூறி­யது.

பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து திரு ஜான்­சன் விலக வேண்­டும் எனக் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை புதிய நிதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட திரு நதீம் ஸஹாவி அழைப்பு விடுத்து அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்­தி­னார்.

"பிர­த­மர் பத­வி­யில் நீங்­கள் நீடிக்க முடி­யாது. உங்­க­ளது நிலைமை மட்­டு­மின்றி கன்­சர்­வேட்­டிவ் கட்சி மற்­றும்

பிரிட்­ட­னின் நிலை­மை­யும் மோசம் ­அடை­யும். நீங்­கள் பதவி விலக வேண்­டும். அது­தான் சரி­யான முடிவு," என்று திரு நதீம் ஸஹாவி டுவிட்­டர் மூலம் தெரி­வித்­ததை அடுத்து, சொந்தக் கட்­சிக்­குள் திரு ஜான்­ச­னுக்கு ஆத­ரவு இல்லை என்­பது தெள்­ளத் தெளி­வா­கத் தெரிந்­தது.

இதற்­கி­டையே, திரு ஜான்

ச­னின் பதவி வில­கலை ரஷ்ய அர­சி­யல்­வா­தி­கள் சிலர் நேற்று கொண்­டா­டி­னர். ரஷ்­யா­வுக்கு எதி­ராக உக்­ரே­னுக்கு ஆயு­தம் வழங்­கிய திரு ஜான்­ச­னுக்­குச் சரி­யான தண்­டனை கிடைத்­

தி­ருப்­ப­தாக அவர்­கள் தெரி­வித்­

த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!