நீர் சுத்திகரிப்பு ஆலையை விரிவுபடுத்த நீர்ப் பிடிப்பு வனத்தின் சில பகுதிகள் அகற்றப்படும்

நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலையை விரி­வு­

ப­டுத்த சிங்­கப்­பூ­ரின் மேற்­குப் பகுதி­ யில், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அரு­கில் இருக்­கும் நீர்ப் பிடிப்பு வனப்­ப­கு­தி­யின் சில பகு­தி­கள் அகற்­றப்­பட இருக்­கின்­றன.

இத­னால் அங்­குள்ள வன

­வி­லங்­குகள் பாதிப்­ப­டை­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் அதிக அள­வி­லான வன­விலங்­கு­கள், தாவ­ரங்­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்ட வனப்­

ப­கு­தி­களில் அது­வும் ஒன்று.

சுவா சூ காங் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை மிக­வும் பழ­மை­யா­னது என்­றும் அதைப் புதுப்­பிக்க மேம்­பாட்­டுப் பணி­கள் மேற்­கொள்­வது அவ­சி­யம் என்­றும் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் கூறி­யது.

நீர்த்­தேக்­கங்­க­ளி­லி­ருந்து பெறப்­படும் நீரை சுத்­தி­க­ரித்து நாட்­டின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள வீடு­

க­ளுக்குத் தண்­ணீர் விநி­யோ­கிக்­கும் ஒரே ஆலை­யாக அது திகழ்

­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போ­துள்ள ஆலைக்குத் தெற்­குப் பகு­தி­யில் உள்ள 3.2 ஹெக்­டர் வனப்­ப­குதி அகற்­றப்­படும். இது கிட்­டத்­தட்ட ஆறு காற்­பந்­துத் திடல்­க­ளுக்­குச் சமம்.

மேம்­பாட்­டுப் பணி­க­ளின் விளை­வாக அப்­ப­கு­தி­யில் ஏற்­ப­டக்­கூ­டிய சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு குறித்து கடந்த ஆண்டு ஆரா­யப்­பட்­டது.

கடந்த மார்ச் மாதத்­தில் இது­கு­றித்து உள்­ளூர் இயற்­கைப் பிரி­யர் குழு­வைச் சேர்ந்­தோ­ரு­டன் கழ­கம் கலந்­து­ரை­யா­டி­ அவர்­க­ளிடம் ஆலோ­ச­னை­ பெற்­றது. இது­

தொ­டர்­பான அறிக்­கையை கழ­கம் அதன் இணை­யப்­பக்­கத்­தில் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று பதி­வேற்­றம் செய்­தது.

மேம்­பாட்­டுப் பணி­கள் நாட்­டின் மேற்­குப் பகு­தி­யில் உள்ள நீர்ப் பிடிப்பு வனத்­தில் இருக்கும்

உயி­ரி­னங்­க­ளுக்கு எதிர்­ம­றை­யான விளை­வு­ களை ஏற்­ப­டுத்­தும் என்று அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அரு­கி­வ­ரும் சுன்டா பாங்­கோ­லின், புல்­புல் வகை பற­வை­கள் அங்கு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அது­மட்­டு­மல்­லா­மல், அந்த வனப்­ப­கு­தி­யில் உள்ள இரண்டு நன்­னீர் ஊற்­று­களும் பாதிப்­ப­டை­யும் என்று அறிக்கை கூறி­யது.

இருப்­பி­னும், மிக மோச­மான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தா­மல் மித­மான பாதிப்பை மட்­டும் ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­லாம் என்­றும் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்

­பட்­டுள்­ளது.

அந்த இரண்டு நன்­னீர் ஊற்­று­களில் ஓர் ஊற்று பாதிப்­ப­டை­யா­தி­ருக்க மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் எல்­லை­களை கழ­கம் மாற்­றி­ய­மைத்­துள்­ளது.

வன­வி­லங்­கு­கள் பீதி­ய­டை­யா­மல் இருக்க பணி­கள் கார­ண­மாக எழும் சத்­தத்­தைக் குறைக்­கும் தடுப்பு

களைப் பயன்­ப­டுத்­த­லாம் என்ற பரிந்­து­ரை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்ன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் திட்­டத்­துக்­கான செல­வு­களை அதி­க­ரிக்­கும் என்­ற­போ­தி­லும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்­படும் பாதிப்­பைக் குறைக்க கழ­கம் கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தாக அதன் நீர் விநி­யோ­கப் பிரிவு இயக்­கு­நர் திரு சியூ சீ கியோங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!