‘இருமுறை சுடப்பட்டதும் நெஞ்சைப் பிடித்தவாறே சரிந்து விழுந்தார்’

திரு அபே, இரு­முறை சுடப்­பட்­ட­தாக நேரில் பார்த்­த­வர்­களை மேற்­கோள் காட்டி ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

"அவர் பேசிக்­கொண்டு இருந்­தார். அப்­போது பின்­னா­லி­ருந்து ஓர் ஆட­வர் வந்­தார். ஆட­வர் முத­லில் சுட்­ட­போது சத்­தம் பெரி­தாக இல்லை.

"ஆனால், இரண்­டா­வது முறை சுட்­ட­போது பெரிய வெடிப்­புச் சத்­த­த்தைக் கேட்கமுடிந்­தது. தீப்­பொ­றி­யும் புகை­யும் காணப்­பட்­டன," என்று சம்­ப­வத்தை நேரில் கண்ட இளம்­பெண் ஒரு­வர் கூறி­ய­தாக தேசிய ஒலி­ப­ரப்பு நிறு­வ­ன­மான என்­எச்கே தெரி­வித்­தது.

நாரா­வில் உள்ள யாமாட்டோ-சைடைஜி ரயில் நிலை­யம் எதிரே பிர­சா­ரம் செய்­து­கொண்டு இருந்த திரு அபே, சுடப்­பட்­ட­வு­டன் அங்­கேயே சரிந்து விழுந்­த­தாக ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்­டன.

அதன் பின்­னர் அவ­ரது கழுத்­தி­லி­ருந்து ரத்­தம் வழிந்­த­தா­க­ திரு அபே­யின் ஆளும் சுதந்­திர ஜன­நா­ய­கக் கட்சி (எல்­டிபி) தரப்பு, ஜிஜி செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­யது. அங்­கி­ருந்த பொது­மக்­கள் ஓடோடி வந்து திரு அபே­யைக் காப்­பாற்ற முத­லு­த­விகளை­ செய்ய முயன்றனர்.

சம்­ப­வத்­தின்­போது திரு அபே­யு­டன் நாரா தொகுதி எல்­டிபி தலை­மைச் செய­லா­ளர் யோஷியோ ஒகிடா, 74, என்­ப­வ­ரும் நின்­றி­ருந்­தார்.

இரு­முறை துப்­பாக்­கிச் சத்­தம் கேட்­ட­தா­க­வும் என்ன நடக்­கிறது என்று தெரி­வ­தற்­குள் திரு அபே நிலை­கு­லைந்து விழுந்து­விட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

திரு அபேயின் இட­து­பு­றம் இருந்து நெஞ்­சி­லும் கழுத்­தி­லும் சுடப்­பட்­ட­தாக டிபி­எஸ் தொலைக்­காட்சி கூறி­யது.

அவர் கீழே விழுந்­த­தும் அங்­கி­ருந்த கூட்­டத்­தி­னர் 'ஆம்­பு­லன்ஸ், ஆம்­பு­லன்ஸ்' என்­றும் மருத்­துவ உதவி கேட்­டும் உரக்கக் கத்­தி­ய­தாக ஒரு செய்­தித்­த­ளம் கூறி­யது. தாக்­கு­த­லுக்கு சிறிய ரக துப்­பாக்கி பயன்

­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­லாம் என்­றது அது.

அதே­நே­ரம், திரு அபே­யின் மெய்க்காப் பாளர்கள் என்று நம்­பப்­படும் மூவர், ஆட­வர் ஒரு­வ­ரைத் துரத்­திப் பிடித்­த­தாக நியூ யார்க் டைம்ஸ் கூறி­யது.

தேர்தல் பிர­சா­ரத்தை படம்­ பி­டிக்க வந்­தி­ருந்த என்­எச்கே செய்தி நிறு­வ­னத்­தின் செய்­தி­யா­ளர் கூறு­கை­யில், இரண்­டா­வது முறை சுடப்­பட்­ட­தும் நெஞ்­சைப் பிடித்­துக்­கொண்டே திரு அபே கீழே விழுந் ததா­கத் தெரி­வித்­தார்.

மற்­றொரு செய்தி நிறு­வ­ன­மான கியோடோ வெளி­யிட்ட புகைப்­ப­டத்­தில், மல்­லாந்து விழுந்­து கிடந்த திரு அபே­யின் வெள்­ளைச் சட்­டை­யில் ரத்­தம் காணப்­பட்­டது.

துப்­பாக்­கிச்­சூடு என்­பது ஜப்­பா­னில் அரிதான சம்பவம். கடு­மை­யான துப்­பாக்­கிக் கட்­டுப்பாட்­டுச் சட்­டங்­கள் அங்கு நடப்­பில் உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!