எரிபொருள் பற்றாக்குறை: மிதிவண்டி விற்பனை இலங்கையில் அதிகரிப்பு

உதவி செய்ய கொழும்பு விரைந்தது ரஷ்யக் குழு

உதவி கேட்டு ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னு­டன் இலங்கை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே தொலை­பே­சி வழி­யா­கப் பேசி

­ய­தைத் தொடர்ந்து மாஸ்கோ பிர­தி­நி­தி­கள் இரு­வர் கொழும்பு வந்­துள்­ள­னர்.

ரஷ்ய எண்­ணெய் நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த அவ்­வி­ரு­வ­ரும் திரு கோத்­த­பா­ய­வைச் சந்­தித்து, தேவைப்­படும் உத­வி­கள் குறித்து விவ­ர­மா­கப் பேசி­னர்.

இச்­சந்­திப்பு நேற்று முன்­தி­னம் நடை­பெற்­ற­தாக இலங்­கை­யின் மின்­சார, எரி­சக்தி அமைச்சு கூறி­யது. திரு புட்­டி­னு­டன் புதன்­கி­ழமை திரு கோத்­த­பாய பேசி இருந்­தார். மறு­நாளே ரஷ்­யப் பிர­தி­நி­தி­கள் இலங்கை வந்­துள்­ள­னர்.

இலங்­கைக்கு உதவி செய்ய ரஷ்யா ஆர்­வம் காட்­டு­வதை இது உணர்த்­து­

வ­தாக செய்­தி­கள் கூறின.

எரி­பொ­ருள், உரம், மருந்­துப்­பொ­ருள்­கள் மற்­றும் கடன்தொகையை ரஷ்­யா­

வி­டம் இருந்து இலங்கை எதிர்­பார்க்­கிறது.

ஏரோ­ஃபு­ளோட் விமா­னச் சேவை­களை மீண்­டும் தொடங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மா­றும் திரு புட்­டி­னி­டம் தாம் கேட்­டுக்­கொண்­ட­தாக நேற்று முன்­தி­னம் திரு கோத்­த­பாய தமது டுவிட்­டர் செய்­தி­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

பொரு­ளி­யல் வீழ்ச்சி கார­ண­மாக பய­ணத்­துறை அடி­யோடு படுத்­து­விட்­ட­தால் அதனை உயிர்ப்­பிக்­கும் முயற்­சி­யாக விமா­னப் போக்­கு­வ­ரத்து சேவை­கள் அவ­சி­யம் என்­றார் அவர்.

ரஷ்யாவுக்குச் சொந்­த­மான ஏரோ­ஃ

பு­ளோட்­டின் கொழும்பு நகர் விமா­னச் சேவை­கள் ஜூன் 4 முதல் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, எரி­பொ­ருள் என்­பது காணக்­கி­டைக்­காத அதி­ச­ய­மாகிவிட்­ட­தன் கார­ண­மாக கார் பயன்­ப­டுத்­திய பல­ரும் (சைக்­கிள்) மிதி­வண்­டிக்கு மாறி­வ­ரு­வ­தாக செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. அதனால் மிதி­வண்டி விற்­பனை அங்கு அதி­க­ரித்­து வருகிறது.

மே மாதம் முதல் ஒவ்­வொரு மாத­மும் 20 மிதி­வண்­டி­களை விற்­று­வ­ரு­வ­தாக விக்­டர் பெரேரா என்­னும் மிதி­வண்டி வியா­பாரி கூறி­னார். இதற்கு முன்­னர் மாதம் இரு மிதி­வண்டி விற்­பதே கடி­னம் என்ற அவர், தற்­போது விற்­பனை பத்து மடங்கு உயர்ந்­து­விட்­டது என்­றும் எரி­பொ­ருள் பற்­றாக்­கு­றை­யால் பல­ரும் மிதி­வண்­டி­யை நாடுகின்றனர் என்றும் கூறி­னார்.

தேவை அதிகரிப்பதாலும் மிதிவண்டி கையிருப்பு குறைவாக இருப்பதாலும் அதன் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டது. பழைய மிதிவண்டிகள், மிதிவண்டி உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்து விட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!