பிரதமர் லீக்கு ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது

பிரதமர் லீ சியன் லூங்குக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் கருத்தை சமூக ஊடகத்தில் பதிவு செய்த சந்தேகத்தின் பேரில் ஒரு 45 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட செய்தி கிடைத்த பின்னர், மிரட்டல் விடுக்கும் அக்கருத்து சிஎன்ஏ செய்தித்தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள கருத்துரைப்புப் பகுதியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை (ஜூலை 8) பிற்பகல் 3.10 மணியளவில் காவல்துறையினருக்கு அது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

மத்திய காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஃபேஸ்புக் கணக்கு யாருடையது என்று கண்டுபிடித்து ஆடவரைக் கைது செய்தனர்.

புகார் அளிக்கப்பட்ட ஐந்து மணி நேரத்துக்குள் இது அனைத்தும் நடந்ததாக காவல்துறையினர் சனிக்கிழமை (ஜூலை 9) அன்று தெரிவித்தனர்.

அதனுடன், ஒரு மடிக்கணினி, ஒரு கைக்கணினி, நான்கு கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

விசாரணை நடைபெற்று வருகிறது.

வன்முறையைத் தூண்டும் மின்னியல் பதிவு செய்யும் அல்லது அதை வெளிப்படுத்தும் குற்றத்தைப் புரிபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!