தர்மன் சண்முகரத்தினம்: இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் 8% -10% பொருளியல் வளர்ச்சி தேவை

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் எட்டிலிருந்து 10 விழுக்காடு வளர்ச்சி கண்டாகவேண்டும் என்று சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் கூறியுள்ளார்.

சராசரி வருமானத்தை உயர்த்தி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பொருளியல் வளர்ச்சி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சமூகக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் அமைச்சருமான திரு தர்மன், ஏழு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று புதுடெல்லியில் அருண் ஜேட்லி நினைவுரையை அவர் ஆற்றினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.

இந்தியா அதன் சீர்திருத்தங்களைத் துரிதப்படுத்த வேண்டும் என்று தமது உரையில் திரு தர்மன் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக அடுத்தப் பத்தாண்டுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றார் அமைச்சர் தர்மன்.

இந்தியாவில் சுமார் 580 மில்லியன் இந்திய குடிமக்கள் 25 வயதுக்கும் குறைவாக உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“அந்த மிக அதிகமான எண்ணிக்கையினர் உலகில் தங்களுக்கு உரிய பொருளை ஈட்ட, அவர்களுக்கு விரைந்து திறன்பயிற்சி அளிக்க வேண்டும்,” என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

“உக்ரேன் போரால் உலகில் பேரழிவு ஏற்படலாம்”

அதே உரையில் உக்ரேனில் தொடரும் போரால் ஏற்படக்கூடிய பேர் ஆபத்து பற்றியும் திரு தர்மன் எச்சரித்தார்.

பலதரப்பட்ட சவால்களை உலகம் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் திரு தர்மன்.

இந்நிலையில் உக்ரேன் போரால் உலகில் பேரழிவுகள் ஏற்படலாம் என்று அவர் கூறினார்.

பல நாடுகளுக்குப் பயன் தந்திருக்கும் திறந்த, ஒருங்கிணைந்த உலக ஒழுங்குமுறையிலிருந்து விலகவேண்டாம் என்று அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!