போரால் பேரழிவு: தர்மன் எச்சரிக்கை

ரஷ்யா-உக்­ரேன் இடையே நடந்து­வரும் போரால் உல­க­ள­வில் பேர­ழிவு விளை­வு­கள் ஏற்­ப­ட­லாம் என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் எச்­ச­ரித்துள்ளார்.

இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்லி­யில் நேற்று முன்­தி­னம் முத­லா­வது அருண் ஜெட்லி நினைவு உரை நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றுப் பேசி­ய­போது திரு தர்­மன் இவ்­வாறு சொன்­னார். சமு­தா­யக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான அவர், ஏழு நாள் பய­ண­மாக இந்­தியா சென்­றுள்­ளார்.

'அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கு­தல் மூலம் வளர்ச்சி, வளர்ச்சி மூலம் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கு­தல்' எனும் தலைப்­பில் உரை­யாற்­றிய திரு தர்­மன், இப்­போது உல­கம் எதிர்­கொண்­டு­வ­ரும் பல்­வேறு சவால்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

அதிக பண­வீக்­கம், குறைந்த வளர்ச்­சி­யு­டன் கூடிய தேக்­க­நி­லைக்­கான வாய்ப்பு, உக்­ரேன் போரால் அதி­க­ரித்­து­வ­ரும் புவி­சார் அர­சி­யல் பதற்­ற­நி­லை­கள், தொற்­று­நோய்­கள் உல­க­ள­வில் பர­வு­வ­தற்­கான அதிக அபா­யம் ஆகி­யவை அவர் குறிப்­பிட்ட சவால்­களில் சில.

கடந்த பத்­தாண்­டில் வளர்ந்த நாடு­கள் எட்­டிய சமூக, பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு கொவிட்-19 தொற்று அச்­சு­றுத்­த­லாக இருந்­து­வரு­வ­தாக திரு தர்­மன் கூறி­னார்.

"அமை­தி­யை­யும் வட்­டார ஒரு­மைப்­பாட்­டை­யும் பேணு­வதை இலக்­கா­கக் கொண்ட அனைத்­து­லக விதி­களும் நெறி­மு­றை­களும் ஒரு­போ­தும் குறை­பா­டற்­ற­தாக இல்லை. ஆனா­லும், உக்­ரே­னில் நடப்­பது ஒரு பெரும் சீர்­கு­லை­வாக இருக்­கிறது. அது, இன்­னொரு சண்டை அல்­லது போரை­யும் தாண்­டிய விளை­வு­களை ஏற்­ப­டுத்­த­லாம்," என்­றார் மூத்த அமைச்­சர் தர்­மன்.

தன்­னைப்­பே­ணித்­த­னம் குறித்­தும் எச்­ச­ரித்த அவர், "பெரிய நாடு­கள் உட்­பட அனைத்து நாடு­க­ளுக்­கும் நன்மை பயப்­ப­தாக இருந்­து­வரும் வெளிப்­ப­டை­யான, ஒருங்­கிணைந்த உலக ஒழுங்­கு­மு­றை­யில் இ­ருந்து பின்­வாங்­கக்­கூ­டாது," என்றும் வலி­யு­றுத்­தி­னார்.

'8%-10% வளர்ச்சி தேவை'

இந்­தியா குறித்­தும் விரி­வா­கப் பேசிய அவர், அந்­நாடு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை விரை­வு­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார். சரா­சரி வரு­மா­னத்தை உயர்த்­த­வும் அதிக வேலை­களை உரு­வாக்­க­வும் அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்கு இந்­தி­யா­வின் வளர்ச்சி விகி­தம் 8 முதல் 10 விழுக்­கா­டாக இருக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் அவர் சொன்­னார். அடுத்த பத்­தாண்­டு­கள் இந்­தி­யா­விற்கு முக்­கி­ய­மான கால­கட்­டம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!