மலேசியா: கூடுதல் தடுப்பூசி போடாத ஏழு மில்லியன் பேர்

மலே­சி­யா­வில் இன்­னும் ஏழு மில்­லி­யன் பேர் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்று அந்­நாட்­டின் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார்.

"கொவிட்-19 தொற்று மீண்­டும் அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது மிக முக்­கி­யம். ஓமிக்­ரான் பிஏ5 போன்ற அதி­கம் தொற்­றக்­கூடிய துணைத் திரி­பு­களை எதிர்­கொள்­ள­வும் அது உத­வும்," என்­றார் பிரதமர்.

அதி­க­மா­னோ­ருக்­குக் கூடு­தல் தடுப்­பூசி போடும்­வி­த­மாக பெரிய அள­வி­லான தடுப்­பூசி நிலை­யங்­கள் மீண்­டும் திறக்­கப்­ப­டுமா என்று கேட்­ட­தற்கு, அது­கு­றித்­துச் சுகா­தார அமைச்சு முடி­வெ­டுக்­கும் என்று திரு இஸ்மாயில் பதி­ல­ளித்­தார்.

தொற்றுப் பரவல் அதிகரித்தாலும் பொருளியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் திட்டமில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இத­னி­டையே, கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மலே­சி­யர்­கள் உடனே அத­னைப் போட்­டுக்­கொள்­ளு­மாறு மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீனும் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அத்­து­டன், கொவிட்-19 தொற்றி­ இருந்­தால் அல்­லது தொற்று அபா­யம் அதி­க­மாக இருந்­தால் 'பக்ஸ்­லோ­விட்' மாத்­திரையை எடுத்­துக்­கொள்­ளும்­ப­டி­யும் அவர் தமது டுவிட்­டர் பக்­கம் வழி­யாக அறி­வுறுத்தி இருக்­கி­றார்.

மேலும், கட்­டா­ய­மில்லை என்­ற­போ­தும் மூடப்­பட்ட அல்­லது கூட்­ட­மான இடங்­களில் இருக்­கும்­போது முகக்­க­வ­சம் அணிந்­து­கொள்­ளு­மா­றும் மலே­சி­யர்­களை அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

தொற்று பாதிப்பு 27.9% அதி­க­ரிப்பு

இதற்­கி­டையே, முந்­திய வாரத்­தை­விட ஜூலை 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரைப்­பட்ட ஏழு நாள்­களில் கொரோனா தொற்று பாதிப்பு 27.9% கூடி­விட்­டது என்று மலே­சிய சுகா­தா­ரத்­து­றை­யின் தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­துள்­ளார்.

மலே­சி­யா­வில் நேற்று முன்­தினம் 3,246 பேரை கொவிட்-19 தொற்றிவிட்டது. அந்­நோ­யால் மேலும் இரு­வர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!