இந்தியாவில் 44வது அனைத்துலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் மாபெரும் தொடக்கம்

அனைத்­து­லக சது­ரங்க ஒலிம்­பி­யாட் போட்­டியை பிர­த­மர் மோடி நேற்று தொடங்கி வைத்­தார். இதற்­காக டெல்­லி­யில் இருந்து தனி விமா­னத்­தில் சென்னை வந்­த­டைந்த அவ­ருக்கு விமான நிலை­யத்­தில் சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. இந்த நிகழ்ச்­சிக்­காக தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரிய உடை­யான வேட்டி சட்­டை­யில் சென்னை வந்­தார் பிர­த­மர் மோடி. முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னும் பட்டு வேட்டி, சட்­டை­யில் வந்­தி­ருந்­தார்.

நேரு விளை­யாட்டு உள்­ள­ரங்­கின் நிகழ்ச்சி மேடை­யில் பிர­த­மர் மோடி, முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஆகிய இரு­வ­ரது படங்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன. தொடக்க விழா­வில் பல்­வேறு நாடு­க­ளின் அணித் தலை­வர்­கள் கொடி­யு­டன் அணி­வ­குப்பு நடத்­தி­னர். நடி­கர்­கள் ரஜி­னி­காந்த், கார்த்தி, கவி­ஞர் வைர­முத்து உள்­ளிட்ட பல முக்­கிய பிர­மு­கர்­கள் இந்த நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்­த­னர். இம்­முறை சது­ரங்க ஒலிம்­பி­யாட்­டில் பங்­கேற்க 187 நாடு­களில் இருந்து 2,000க்கும் மேற்­பட்ட சதுரங்க வீரர்­கள், வீராங்­க­னை­கள் மாமல்­ல­பு­ரத்­தில் முகா­மிட்­டுள்­ள­னர்.

முன்­ன­தாக இந்த வீரர்­கள் சென்­னை­யில் இருந்து மாமல்­ல­பு­ரத்­துக்கு சென்­ற­போது, நக­ரின் வெவ்­வேறு பகு­தி­களில் பறையாட்­டம், ஒயி­லாட்­டம், பர­த­நாட்­டி­யம் உள்­ளிட்ட கலை நிகழ்ச்­சி­க­ளு­டன் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. வீரர்­கள் மொத்­தம் 87 பேருந்­து­களில் அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். நிகழ்ச்சி தேசிய கீதம் மற்­றும் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் தொடங்­கி­யது.

கலை நிகழ்ச்­சி­களில் பங்­கேற்ற இளம் இசைக்­க­லை­ஞர் லிடி­யன் நாதஸ்­வ­ரம் கண்­ணைக் கட்­டிக்­கொண்டு பியானோ வாசித்து அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­னார். வர­வேற்­பு­ரைக்­குப் பிறகு நடி­கர் கமல்ஹாச­னின் குர­லில் தமிழ் வர­லாறு குறித்த முப்­ப­ரி­மாண நிகழ்ச்சி அரங்­கே­றி­யது. இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர்.ரஹ்­மான் இசை­ய­மைத்த பாட­லும் ஒலிக்­கப்­பட்­டது.

Remote video URL

சது­ரங்க விளை­யாட்­டின் பிறப்­பி­டத்­தில் உலக ஒலிம்­பி­யாட் போட்டி நடை­பெ­று­வது வர­லாற்று சிறப்­பு­மிக்­கது என கிரிக்­கெட் வீரர் சச்­சின் டெண்­டுல்­கர் கூறி­யுள்­ளார்.

பிர­த­மர் மோடியை விழா மேடைக்கு அழைத்து வந்­தார் முதல்­வர் ஸ்டா­லின். பின்­னர் இந்­தி­யா­வின் முன்­னணி சது­ரங்க விளை­யாட்­டா­ள­ரான விஸ்வநாதன் ஆனந்த், மேடைக்­குக் கொண்டு வந்த ஒலிம்­பி­யாட் ஜோதி­யைப் பெற்று பிர­த­மர் மோடி­யி­டம் ஒப்­ப­டைத்­தார்.

பிர­த­மர் அதை இந்­தி­யா­வின் இளம் சது­ரங்க விளை­யாட்­டா­ள­ரான பிரக்­ஞா­னந்­தா­வி­டம் கொடுக்க, ஒலிம்­பி­யாட் ஜோதி ஏற்றி வைக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து ஒலிம்­பி­யாட் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கி­யது.

சது­ரங்க விளை­யாட்டு இந்­தி­யா­வில்­தான் தோன்­றி­யது என்று இவ்­வி­ழா­வில் பேசிய மத்­திய அமைச்­சர் அனு­ராக் தாக்­கூர் குறிப்­பிட்­டார்.

ஒலிம்­பி­யாட் மூலம் சது­ரங்­கம் மீதான ஆர்­வம் அதி­க­ரிக்­கும் என்­றார் அவர்.

இதை­ய­டுத்து உரை­யாற்­றிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், ஒலிம்­பி­யாட் போட்­டிக்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்ய தமி­ழக அர­சுக்கு நான்கு மாதகால அவ­கா­சம் மட்­டுமே கிடைத்­தது என்­றார்.

உல­கத்­தின் கவ­னத்தை தமி­ழ­கம் ஈர்க்­கும் என்­ப­தன் அடிப்­ப­டை­யில் இந்­தப் போட்டி நடத்­தப்­ப­டு­கிறது என்­றும் இந்­தி­யா­வில் உள்ள 75 கிராண்ட் மாஸ்­டர்­களில் 26 பேர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் பெரு­மி­தம் தெரி­வித்­தார்.

ஒலிம்­பி­யாட் போட்­டி­யின் அதி­கா­ர­பூர்வ சின்­ன­மான ‘தம்பி’ குறித்து குறிப்­பிட்ட அவர், முன்­னாள் முதல்­வர் அண்ணா அனை­வ­ரை­யும் ‘தம்பி’ என்று பாசத்­து­டன் குறிப்­பி­டு­வார் என்­றார்.

சகோ­த­ரத்­து­வத்தை பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் இந்­தச் சின்­னம் அமைந்­துள்­ளது என்­றும் முதல்­வர் குறிப்­பிட்­டார்.

கீழ­டி­யில் இரண்டு வித­மான ஆட்ட காய்­கள் கிடைத்­துள்­ளன. அவை தந்­தங்­களி­னால் ஆனவை. சது­ரங்க விளை­யாட்டுக்­காக அவை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­கி­றார்­கள் ஆராய்ச்­சி­யா­ளர்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!