கொவிட்-19: பத்தில் ஆறு பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்

அமைச்சர் ஓங்: அண்மைய தொற்று அலை இவ்வாரத்தில் மேலும் தணியலாம்

சிங்­கப்­பூ­ரில் உள்­ளூர்­வா­சி­களில் பத்­துப் பேரில் ஆறு பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் 1.7 மில்­லி­யன் கொவிட்-19 பாதிப்­பு­கள் பதி­வா­கி­யுள்­ளன என்­றும் இது நாட்­டின் மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட 30% என்­றும் திரு ஓங் குறிப்­பிட்­டார்.

"ஏற்­கெ­னவே கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­னரா என்­பதைக் கண்­ட­றிய, பல­துறை மருந்­த­கங்­களுக்கு வழக்­க­மாக வரும் நோயாளி­கள் மற்­றும் மற்ற சுகா­தா­ரத் தொண்­டூ­ழி­யர்­க­ளின் ரத்த மாதி­ரி­களை முறை­யா­கக் கண்­கா­ணிக்­கி­றோம். அந்த மாதி­ரி­கள் மூலம், உள்­ளூர்­வா­சி­களில் கிட்­டத்­தட்ட 60 விழுக்­காட்­டி­னர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டு இ­ருக்­க­லாம் என்று மதிப்­பிட்­டுள்­ளோம்," என்று அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

"இருப்­பி­னும், இது சமூக அள­வில் நோய்த்­த­டுப்­பாற்­றலை அளிக்­காது. ஒட்டு­மொத்­தத்­தில், கொவிட்-19 கிருமி தொடர்ந்து உரு­மாறி வரு­வ­தா­லும் தடுப்­பூ­சிப் பாது­காப்­பை­யும் தாண்டி மக்­க­ளைத் தொற்­று­வ­தா­லும் சமூக அள­வில் நோய்த்­த­டுப்­பாற்­ற­லைப் பெற முடி­யும் என்று உல­கம் முழு­வ­து­முள்ள அறி­வி­ய­லா­ளர்­கள் கரு­த­வில்லை," என்­றும் அவர் சொன்­னார்.

அதி­கம் பர­வக்­கூ­டிய பிஏ.5 ஓமிக்­ரான் திரி­பால் ஏற்­பட்­டுள்ள கொவிட்-19 அலையை சிங்­கப்­பூர் இப்­போது எதிர்­கொண்டு வரு­கிறது.

இந்த நிலை­யில், சமூ­கக் கட்­டுப்­பாடு­க­ளுக்கு அதிக வர­வேற்பு இல்­லா­த­தால், தீவிர நோய்த்­தொற்­றி­லி­ருந்து மக்­க­ளைக் காக்க தடுப்­பூ­சி­க­ளையே நம்­பி­யி­ருக்க வேண்­டி­யுள்­ளது என்று திரு ஓங் கூறி­னார்.

இவ்­வாண்டு தொடக்­கத்­தில் உரு­வான ஓமிக்­ரான் திரிபு அலை­யின்­போது, கிருமி தொற்­றி­யோ­ரில் 2.4 விழுக்­காட்­டி­னர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இப்­போ­தைய அலை­யில், அவ்­வி­கி­தம் 1.9 விழுக்­கா­டாக உள்­ளது.

இந்­நி­லை­யில், 60 வய­தும் அதற்­கும் மேலான மூத்த குடி­மக்­களில் 40,000 பேர் தகு­தி­யி­ருந்­தும் இன்­னும் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை. மேலும் 40,000 மூத்த குடி­மக்­கள் முத­லிரு தவணை தடுப்­பூ­சி­க­ளையே இன்­னும் முழு­மை­யா­கப் போட்­டுக்­கொள்­ள­வில்லை.

"கொவிட்-19 தொற்­றும் பட்­சத்­தில் அவர்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட அதிக வாய்ப்­புள்­ளது. நட­மா­டும், இல்லத் தடுப்­பூ­சிக் குழுக்­கள் மூல­மாக அவர்­களைச் சென்­ற­டைய அர­சாங்­கம் தொடர்ந்து முய­லும்," என்று திரு ஓங் சொன்­னார்.

இதற்­கி­டையே, பிஏ.5 ஓமிக்­ரான் திரி­பால் ஏற்­பட்­டுள்ள அண்­மைய தொற்று அலை இவ்­வா­ரத்­தில் மேலும் குறை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சர் ஓங் தெரி­வித்­துள்­ளார்.

தொற்று எண்­ணிக்கை கடந்த பத்து நாள்­க­ளா­கக் குறைந்­து­ வ­ரு­கின்­றன என்றும் வாராந்­த­ரத் தொற்று விகி­தம் 0.9க்கும் கீழ் சரிந்­துள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பெரும்­பா­லான மக்­கள் தங்­க­ளது இயல்பு வாழ்க்­கை­யைத் தொடர அனு­மதிக்­கும் வகை­யில், அண்­மைய அலை­யின்­போது சமூ­கக் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­க­வில்லை என்று அவர் கூறி­னார்.

"ஆனா­லும், நமது மருத்­து­வ­ம­னை­களில் நிலைமை வழக்­கம்­போல் இல்லை. அண்­மைய அலை நமது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பின்­மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் பர­ப­ரப்­பாக இயங்கி வரு­கின்­ற­னர். பல­துறை மருந்­த­கங்­க­ளை­யும் தனி­யார் மருந்­த­கங்­க­ளை­யும் அதி­க­மான நோயா­ளி­கள் நாடி­னர்," என்­றார் அவர்.

இந்­நி­லை­யில், இலே­சான கொவிட்-19 பாதிப்பு இருந்­தால் தொலை­ம­ருத்­து­வச் சேவை­யைப் பயன்­ப­டுத்த அர­சாங்­கம் ஊக்­கு­விக்­கிறது என்­றும் முன்­பை­விட இப்­போது அதற்கு அதிக வர­வேற்பு உள்­ளது என்­றும் அமைச்­சர் குறிப்பிட்டார்.

குறைந்த அபா­ய­முள்ள நோயா­ளி­களை கொவிட்-19 சிகிச்சை நிலை­யங்­களுக்கு அனுப்­பி­யும் நீண்­ட­கா­ல­மா­கத் தங்­கி­யுள்ள நோயா­ளி­க­ளைத் தாதிமை இல்­லங்­கள் போன்ற சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பி­யும் மருத்­து­வ­ம­னை­க­ளின் பணிச்­சு­மையை அர­சாங்­கம் குறைத்து வரு­வ­தாக அவர் விவ­ரித்­தார்.

"தனி­யார்­ து­றை­யி­னர் அல்­லது சமூக சேவை வழங்­கு­நர்­க­ளால் அத்­த­கைய பல நிலை­யங்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. அவர்­களை மிக­வும் மெச்­சு­கி­றோம்," என்று திரு ஓங் சொன்னார்.

'ஆண்டுதோறும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வது வழக்கமாகலாம்'

கொவிட்-19 கிருமித் திரிபுகள் மீண்டும் தொற்றாமல் மக்களைப் பாதுகாக்க ஆண்டுதோறும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வது வழக்கமாக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

"இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி என்று சொல்லாமல், இதுநாள்வரையிலான தடுப்பூசிகள் என்ற சொல்லை வேண்டுமென்றே பயன்படுத்துகிறேன். ஏனெனில், ஒருகட்டத்தில் சளிக்காய்ச்சல் தடுப்பூசிகளைப் போன்று, எத்தனை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என்று எண்ணுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டி இருக்கும்," என்று அமைச்சர் ஓங் சொன்னார்.

"மாறாக, உரிய கால இடை வெளியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அது ஒன்பது மாதங்களாகவோ ஓராண்டாகவோ இருக்கலாம். வரும் மாதங்களில் சுகாதார அமைச்சு, இந்தக் கால இடைவெளியை முடிவுசெய்ய முயலும்," என்றார் திரு ஓங்.

அண்மைய தொற்று அலையின் மோசமான காலகட்டம் முடிந்து விட்டது என்ற அவர், ஆயினும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

"தடுப்பூசி மற்றும் முந்திய தொற்று அளிக்கும் பாதுகாப்பு குறையும்போது, சமூகத்தில் கிருமி மீண்டும் பரவி, பாதிப்பு கூடலாம். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்," என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!