ஐந்தாண்டுகளில் காணாத அளவில் வேலையிலிருந்து விலகிய பொது மருத்துவமனை தாதியர்

ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சென்ற ஆண்டு பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியரில் ஆக அதிகமானோர் வேலையிலிருந்து விலகியுள்ளனர்.

சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் செவ்வாய்க்கிழமையன்று (2 ஆகஸ்ட்) நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.

தாதியரின் நலன், வேலை அளவு, ஊதியம் உள்ளிட்டவற்றைப் பற்றி நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் எழுப்பிய கேள்விகளுக்குத் திருவாட்டி ரஹாயு பதிலளித்தார்.

பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியரில் 7.4 விழுக்காட்டினர் சென்ற ஆண்டு வேலையிலிருந்து விலகியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விகிதம், அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் பதிவானதைவிட அதிகம்.

அதோடு, வெளிநாடுகளைச் சேர்ந்த தாதியரிடையே இந்த விகிதம் மேலும் அதிகம் என்பதைத் திருவாட்டி ரஹாயு சுட்டினார்.

அவர்களில் 14.8 விழுக்காட்டினர் சென்ற ஆண்டு வேலையிலிருந்து விலகினர்.

சென்ற ஆண்டுக்கு முந்தைய நான்காண்டுகளில் இந்த விகிதம் 9.4 விழுக்காடைத் தாண்டியதில்லை.

உலகளவில் இத்துறையில் போட்டி அதிகரித்திருப்பது இதற்குக் காரணம் என்று திருவாட்டி ரஹாயு கூறினார்.

எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளைச் சேர்ந்த தாதியரால் அவரவர் நாடுகளுக்குத் திரும்பிப் போகமுடியும்.

மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர் என்றும் திருவாட்டி ரஹாயு குறிப்பிட்டார்.

எனினும், கடந்த ஐந்தாண்டுகளில் தீவிரப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் பொது மருத்துவமனைகளின் பொது படுக்கைப் பிரிவுகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் பணியாற்றும் தாதியரின் எண்ணிக்கையில் அதிக மாற்றம் இல்லை என்று திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த தாதியரில் அதிகமானோர் பதவிவிலகுவதைத் தொடர்ந்து உள்ளூர் தாதியருக்குப் போதுமான ஓய்வு வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று திரு லூயிஸ் இங் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த திருவாட்டி ரஹாயு, சவாலான சூழலில் வேலை செய்யும் தாதியருக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!