600,000 குடும்பங்கள் ஏஆர்டி கருவி பெற்றன

சிங்­கப்­பூ­ரில் மூன்­றில் ஒரு பங்­கிற்கும் மேலான குடும்­பங்­கள் 10 'ஏஆர்டி' பரி­சோ­த­னைக் கரு­வி­களை அஞ்­சல்­பெட்­டி­ வழி பெற்­றுக்­கொண்டு உள்­ள­ன.

ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய தேசிய அள­வி­லான மூன்­றா­வது 'ஏஆர்டி' விநி­யோ­கத் திட்­டத்­தின்­கீழ் கரு­வி­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

இது­ கு­றித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த சுகா­தார அமைச்சு, ஜூலை 31ஆம் தேதிப்படி சுமார் 600,000 குடும்­ பங்­கள் ஏஆர்டி பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளைப் பெற்றுக்­கொண்டு உள்­ள­தா­கத் தெரி­வித்­தது.

எஞ்­சிய ஒரு மில்­லி­யன் குடும்­பங்­க­ளுக்கு செப்­டம்­பர் நடுப்­ப­குதிக்­குள் கரு­வி­கள் வந்­து­சே­ரும் என்று அமைச்சு கூறி­யது.

சிங்­போஸ்ட் கைப்­பே­சிச் செயலி­யைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் ஏஆர்டி பரி­சோ­த­னைக் கரு­வி­கள் வந்­து­சேர்ந்­து­விட்­ட­னவா என்­ப­தை மக்­கள் தெரிந்து­கொள்­ள­லாம்.

கரு­வி­கள் அஞ்­சல்­பெட்­டி­களில் வந்­து­சேர்ந்­து­விட்­ட­வு­டன் அவர்­களுக்­குத் தக­வல் அளிக்­கப்­படும்.

அதி­க­மான பரி­சோ­த­னைக் கரு வி­களை விநி­யோ­கிக்க வேண்­டி­உள்­ள­தால், சில குடும்­பங்­கள் அவற்றைப் பெற்­றுக்­கொள்ள ஒரு சில வாரங்­கள் ஆக­லாம் என்று சுகா­தார அமைச்சு கடந்த மாதம் தெரி­வித்து இருந்­தது.

ஜூலை 18ஆம் தேதி ஏஆர்டி விநி­யோ­கத் திட்­டத்­தைத் தொடங்கி­வைத்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், சுய­மாக கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­வது "நம் அன்­றாட வாழ்­வின் ஓர் அங்­க­மா­கி­விட்­டது" என்று கூறி­னார்.

சளி, தொண்­டை­வலி அல்­லது காய்ச்­சல் உள்ளவர்கள், நாள்­தோ­றும் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார். அறி­கு­றி­கள் தோன்­றிய ஒரு சில நாள்­களுக்குப் பிறகே கொவிட்-19 தொற்று உறு­தி­யா­க­லாம் என்­பதே இதற்­குக் கார­ணம்.

பொறுப்­புள்ள முறை­யில் நடந்து கொள்­வதே இப்­போ­தைய தொற்று அலை­யைச் சமா­ளித்து மீண்டுவர நமக்கு மிக முக்­கி­ய­மா­னது என்று அமைச்­சர் மேலும் தெரி­வித்­தார்.

இதற்கு முந்­திய இரு ஏஆர்டி விநி­யோ­கத் திட்­டங்­கள் மூலம் கிட்­டத்­தட்ட 25 மில்­லி­யன் ஏஆர்டி கரு­வி­களை அர­சாங்­கம் வழங்கி இருந்­தது. முதல் விநி­யோ­கத் திட்­டம் 2020 அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை­யி­லும் இரண்­டா­வது திட்­டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்­டம்­பர் மாதங்­க­ளி­லும் இடம்­பெற்று இருந்­தன.

இவ்­விரு திட்­டங்­கள் மூலம் ஒவ்­வொரு குடும்­ப­மும் மொத்தம் 16 பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளைப் பெற்­றுக்­கொண்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!