நேன்சி உறுதி: தைவானை அமெரிக்கா கைவிடாது

சீனா கடும் எதிர்ப்பு; கர்ஜனை; ராணுவப்பயிற்சி, தடை, எச்சரிக்கை

தைவானை அமெ­ரிக்கா கை விடாது என்­பதைத் தெள்­ளத்­தெளி­வாக எடுத்துக்காட்­டவே தமது தைவான் பய­ணம் இடம்­பெற்­ற­தாக அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் திரு­வாட்டி நேன்சி பெலோசி தெரி­வித்துள்ளார்.

இது­வரை இல்­லாத அள­வுக்கு இப்­போது தைவா­னுக்கு அமெ­ரிக்­கா­வின் ஆத­ரவு மிக முக்­கி­ய­மாக இருக்­கிறது என்று தைவா­னிய அதி­பர் சாய் இங்- வென்­னி­டம் அவர் தெரி­வித்­தார்.

தைவா­னி­லும் உல­கின் வேறு பகு­தி­க­ளி­லும் ஜன­நா­ய­கத்தைக் கட்­டிக்­காப்­பது என்ற அமெ­ரிக்­கா­வின் தீர்­மா­னம் இரும்புபோல் உறு­தி­யா­னது என்றும் திரு­வாட்டி நேன்சி குறிப்­பிட்­டார்.

தைவா­னுக்கு செவ்­வாய்க்­கிழமை வருகை அளித்த அமெரிக்க நாடா­ளு­மன்ற நாயகர், நேற்று தைவா­னிய அதி­ப­ரைச் சந்­தித்­தார். அப்­போது அவர் தைவா­னிய அதி­ப­ரி­டம் இவ்­வாறு தெரி­வித்­தார்.

இத­னி­டையே, தைவா­னுக்கு வருகை அளித்ததற்காக திரு­வாட்டி நேன்­சிக்கு நன்றி கூறிய தைவா­னிய அதி­பர், இப்­போ­தைய மிக முக்­கி­ய­மான கால­கட்­டத்­தில் தைவா­னுக்கு ஆத­ரவு அளிப்­பது என்ற உறு­தி­யான செயல்­களை மேற்­கொண்­ட­தற்­காக அவரைப் பாராட்­டி­னார்.

அமெ­ரிக்­கா­வுக்கு நம்­பிக்­கைக்­கு­ரிய பங்­கா­ளி­யாக தைவான் இருக்­கிறது என்­றும் அமெ­ரிக்­கா­வு­டன் தொடர்ந்து சேர்ந்து செயல்­பட்டு பாது­காப்பு, பொரு­ளி­யல் மேம்­பாடு, விநி­யோ­கக் கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றில் ஒத்­து­ழைப்பை தைவான் பலப்­ப­டுத்­தும் என்­றும் தைவா­னிய அதி­பர் மேலும் குறிப்­பிட்­டார்.

இதனிடையே, அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் பெலோ­சி­யின் தைவான் வருகை சீனா­வைப் பெரிய அள­வில் சீண்­டிப் பார்ப்­ப­தாக அமைந்­து­விட்­டது.

சர்ச்­சைக்­கி­ட­மான அமெ­ரிக்க பேரா­ள­ரின் வருகை சீனா­வின் இறை­யாண்­மை­யில் தலை­யி­டும் ஒன்று என்­றும் தைவான் சுதந்­திரத்­துக்­குப் பாடு­படும் தரப்புகளுக்­குக் கடும் தண்­டனை உண்டு என்­றும் பெய்­ஜிங் கர்­ஜித்­தது.

அதோடு மட்­டு­மின்றி, நேன்சி­யின் வரு­கையை எதிர்த்து, அதை எச்­ச­ரிக்­கும் வகை­யில் தைவானைச் சுற்­றி­லும் பெரி­ய­அளவில் ராணு­வப் பயிற்­சியை சீனா தொடங்­கி­யது.

ராணு­வப் பயிற்சி நடப்­ப­தால் தைவா­னைச் சுற்­றி­யுள்ள ஆகாய வழி­யைத் தவிர்த்­துக்­கொள்­ளும்­படி ஆசி­யா­வில் செயல்­படும் விமான நிறு­வ­னங்­க­ளுக்கு சீனா எச்­ச­ரிக்கை விடுத்­தது.

இயற்கை மணலை தைவானுக்கு ஏற்­று­மதி செய்ய சீனா தடை விதித்­தது. தைவானில் இருந்து சில வகை உண­வுப்­பொ­ருள்­களை இறக்­கு­மதி செய்­ய­வும் சீனா தடை விதித்­தது.

இந்­நி­லை­யில், சீனா நடத்­தும் பயிற்­சியை அனைத்­து­லக விதி­மீ­றிய செயல் என்று தைவான் கண்­டித்­தது. தைவான் நீரி­ணை­யில் அமை­தி­யும் நிலைப்­பா­டும் தேவை என்று தைவான் வலி­யு­றுத்­திக் கூறி­யது.

இத­னி­டையே, இந்­தோ­னீ­சி­யா­வின் சுமத்ரா தீவு அருகே அமெ­ரிக்க-இந்­தோ­னீ­சிய இரு நாட்டு ராணு­வ­மும் வரு­டாந்­திர கூட்­டுப் பயிற்­சியை நேற்று தொடங்­கின. அந்­தப் பயிற்­சி­யில் இதர நாடு­களின் வீரர்­களும் கலந்­து­கொள்­வார்­கள் என்று அறி­விக்­கப்­பட்­டது.

கடந்த 25 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக தைவா­னுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது ஆக உய­ரிய அமெ­ரிக்க அதி­கா­ரி­யின் வரு­கை­யாக திரு­வாட்டி நேன்சி செவ்­வாய்க்­கி­ழமை தைவா­னில் தரை­யி­றங்­கி­னார்.

திரு­வாட்டி நேன்சி தன்­னு­டைய தைவான் பய­ணத்தை முடித்­துக்­கொண்டு தென்­கொ­ரி­யா­வின் சோல் நக­ருக்­குச் சென்­றார். அவர் ஜப்­பா­னுக்­கும் செல்­கி­றார்.

தன்­னி­டம் இருந்து பிரிந்து செல்ல முய­லும் தன் மாநி­ல­மாக தைவானை சீனா கரு­து­கிறது.

தைவா­னு­டன் அர­ச­தந்­திர உறவை வைத்­துக்­கொள்­ளும் நாடு­ க­ளைச் சீனா எதிர்க்­கிறது. திரு­வாட்டி நேன்­சி­யின் தைவான் வரு­கையை, அது இடம்­பெ­று­வ­தற்கு முன்பே சீனா கண்­டித்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!