மதிய உணவு பணம் ரூ.11.46 கோடி சுருட்டிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்; விசாரணை

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் மதிய உணவுக்­காக ஒதுக்­கப்­பட்ட தொகை­யில் ரூ.11.46 கோடி (சுமார் $2 மில்­லி­யன்) பணத்­தைக் கையா டியதாக தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர் ஒரு­வர் மீது வழக்கு பதி­யப்­பட்­டது.­

இதர பல துறை­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் வங்கி அதி­காரிகளும் அதற்கு உடந்­தை­யாக இருந்து இருக்­கி­றார்­கள் என்று ஊழல் ஒழிப்­புத்­துறை புகா­ரில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சந்­தி­ர­காந்த் சர்மா என்ற அந்த ஆசி­ரி­யர் உள்­ளூர் அதி­கா­ரி­க­ளு­டன் சேர்ந்­து­கொண்டு 2007ல் ‘கல்விச் சங்­கம்’ என்ற தனி­யார் அமைப்பை ஏற்­ப­டுத்­தி­னார்.

மாண­வர்­க­ளுக்கு மதிய உணவு விநி­யோ­கிக்­கும் பொறுப்பு அந்த அமைப்­பி­டம் ஒப்­படைக்­கப்­பட்­டது.

அந்­தச் சங்­கத்­தின் பொரு­ளா­ள­ராக சுனில் சர்மா என்ற பெய­ரில் அவர் தன்­னையே நிய­மித்­துக் கொண்­டார்.

சங்­கத்­தில் உற­வி­னர்­கள், குடும்­பத்தினரை அவர் நிய­மித்­தார். அந்தச் சங்­கம் போலி­யான கட்­டணப் பட்­டி­யல்களைத் தாக்­கல் செய்­தது. அவற்­றின் பேரில் பணம் பெறப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு வங்­கிக் கணக்­கு­களில் பணம் போடப்­பட்­டது. ஃபெரோசா­பாத் மாவட்­டத்­தைச் சேர்ந்த சர்மா ஜெய்ப்­பூர் தொடக்­கப்­பள்ளி என்ற பள்­ளிக்­கூ­டத்­தில் தலைமை ஆசி­ரி­ய­ராக இருக்­கி­றார்.

அவ­ருக்கு எதி­ராக புகார் தாக்­கலா­னதை அடுத்து மாநில அரசு 2017 ஆம் ஆண்­டில் விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யது.

அவர் வங்­கி­களில் கடன் பெற்று ஆக்ரா மாவட்­டத்­தில் பெரும் நிலத்தை வாங்­கிக் குவித்­தார்.

அந்த ஆசி­ரி­யர் மொத்­தம் 11.46 கோடி ரூபாயைச் சுருட்டி இருப்­ப­தாக ஆக்­ரா­வில் தாக்­க­லான புகா­ரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­கா­ரி­கள் ஆசி­ரி­ய­ரை­யும் இதர சில அதி­கா­ரி­க­ளை­யும் பிர­மு­கர்­க­ளை­யும் விசா­ரித்து வரு­வ­தா­க­த் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!