இதுவரை இல்லாத அளவில் மாபெரும் போர்ப் பயிற்சி

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் நேன்சி பெலோசி நேற்று முன்­

தி­னம் தைவா­னு­க்கு அதி­கா­ர­

பூர்­வப் பய­ணம் மேற்­கொண்­ட­தற்கு எதிர்ப்பு காட்­டும் வகை­யில் தைவா­னைச் சுற்­றி­வ­ளைத்து, இதுவரை இல்­லாத அள­வில் மிகப் பெரிய போர்ப் பயிற்­சியை சீனா நேற்று நடத்­தி­யது.

தைவா­னைச் சுற்­றி­யுள்ள கடற்­ப­கு­தியை நோக்கி சீனா கிட்­டத்­தட்ட 11 ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சி­யது. இதற்கு முன்­ன­தாக 1996ஆம் ஆண்­டில் தைவா­னைச் சுற்­றி­யுள்ள கடற்­ப­கு­தி­யில் சீனா ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சி­யது

தைவா­னைத் தனது ஒரு பகுதி ­யா­கக் சீனா கரு­து­கிறது. எனவே, அதை ஒரு தனி நாடா­கக் கருதி அமெ­ரிக்க பேரா­ளர் ஒரு­வர் பய­ணம் மேற்­கொண்­டி­ருப்­பது சீனா­வின் இறை­யாண்­மை­யில் தலை­யி­டு­வ­தற்­குச் சமம் என்று சீனா கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

நேற்று தொடங்­கிய போர்ப் பயிற்­சி­கள் நாளை மறு­நாள் வரை நீடிக்­கும் என்று சீனா அறி­வித்­துள்­ளது. தைவா­னைச் சுற்­றி­யுள்ள கடற்­ப­கு­தி­யி­லும் வான்­வெ­ளி­யி­லும் உண்­மை­யான தோட்­டாக்­கள், ஏவு­க­ணை­கள் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்தி போர்ப் பயிற்­சி­கள் நடை­பெ­றும் என்று சீனா கூறி­யது.

தைவா­னுக்கு அரு­கில் சீனா­வின் கட்­டுப்­பாட்­டில் உள்ள தளங்­க­ளி­லி­ருந்து ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­ப­டு­வதை ஏஎ­ஃப்பி செய்தி ­யா­ளர்­கள் கண்­ட­னர்.

சீனா நடத்­தும் இந்­தப் போர்ப் பயிற்சி ஐநா விதி­மு­றை­களை மீறு­வ­தாக தைவா­னிய அதி­கா­ரி­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.

இதற்­கி­டையே, சீனா பாய்ச்­சிய சில ஏவு­க­ணை­கள் முதல்­மு­றை­யாக ஜப்­பா­னின் பிரத்­தி­யே­கப் பொரு­ளி­யல் மண்­ட­லத்­தில் விழுந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று ஜப்­பா­னிய தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

திரு­வாட்டி பெலோ­சி­யின் தைவான் பய­ணத்­தைக் கார­ண­மா­கக் காட்டி தைவா­னிய கடற்

­ப­கு­தி­யில் மூர்க்­கத்­த­ன­மான ராணுவ நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட வேண்­டாம் என்று கேட்­டுக்­கொண்ட ஜி7 நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­களை சீனா

சாடி­யது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!