லாரி விபத்தில் இளையர் இருவர் மரணம்

அப்­பர் புக்­கிட் தீமா சாலையை நோக்­கிச் செல்­லும் ஓல்டு ஜூரோங் சாலை­யில் நேற்று முன்­தி­னம் லாரி ஒன்று விபத்­துக்கு உள்­ளா­ன­தில் 17 மற்­றும் 23 வயது நிரம்­பிய இளை­யர்­கள் இரு­வர் உயி­ரி­ழந்­த­னர்.

மது­போ­தை­யி­லும் கவ­னக்­குறை­வுடனும் லாரியை ஓட்டி மர­ணம் விளை­வித்­த­தா­கக் கூறி, அதன் 25 வயது ஓட்­டு­நர் நேற்று கைது செய்­யப்­பட்­டார்.

வாக­னத்­தின் முன்­னி­ருக்­கை­யில் சிக்­கி­யி­ருந்த இரு­வர், நீரி­யல் கரு­வி­யின் துணை­கொண்டு மீட்­கப்­பட்­ட­தா­கச் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அந்த லாரி, ஒரு மரத்­தின்­மீது மோதி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது. நிகழ்­வி­டத்­தி­லேயே இரு­வர் மாண்­டு­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

லாரி­யின் ஓட்­டு­ந­ரும் அதி­ல் இ­ருந்த 15 முதல் 20 வய­திற்­குட்­பட்ட மேலும் ஐந்து பய­ணி­களும் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

விபத்து குறித்து காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் எவ­ரும் இவ்­வி­பத்­தில் சிக்­க­வில்லை என்று அறி­யப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறி­யது.

மது­ அருந்­திவிட்டு வாக­னம் ஓட்­டும் குற்­றத்­திற்கு, முதன்­முறை எனில் $10,000 வரை அப­ரா­த­மும் ஓராண்­டு­வரை சிறை­யும் விதிக்­கப்­ப­ட­லாம். மீண்­டும் அக்­குற்­றத்­தைப் புரிந்­தால் $20,000 வரை அப­ரா­த­மும் ஈராண்­டு­வரை சிறை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!