போர் ஒத்திகையில் சீனா: தைவான்

சீனா நடத்­தி­வ­ரும் போர்ப் பயிற்சி, தைவா­னில் தாக்­கு­தல் நடத்­தும் பாவ­னைப் பயிற்­சி­யைப்­போல் தெரி­வ­தாக தைவான் கூறி­யி­ருக்­கிறது. சீன போர் விமா­னங்­களும் போர்க் கப்­பல்­களும் தைவான் நீரி­ணைப் பகுதி எல்­லை­யைக் கடந்­துள்ள வேளை­யில் தைவான் இவ்­வாறு கூறி­யுள்­ளது. தைவான் அதன் பதில் நட­வ­டிக்­கை­யாக வானொலி எச்­ச­ரிக்­கையை விடுத்து, விமா­னம் மற்­றும் கடற்­ப­டைக் கப்­பல்­க­ளை­யும் அனுப்­பி­யுள்­ள­தாக தைவா­னிய தற்­காப்பு அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் நேன்சி பெலோசி தைவா­னுக்கு மேற்­கொண்ட பய­ணம், சீனா­வைக் சினம­டை­யச் செய்­துள்­ளது. இதற்குப் பதி­லடி தரும் வித­மாக, முக்கிய விவ­கா­ரங்­களில் வாஷிங்­ட­னு­டன் ஒத்­து­ழைப்பை நிறுத்­திக்­கொள்­வ­தாக சீனா அறி­வித்­து உள்­ளது.

குறிப்­பாக, பரு­வ­நிலை மாற்­ற­மும் தற்­காப்பு ஒத்­து­ழைப்­பும் இந்த விவ­கா­ரங்­களில் அடங்­கும். உல­க­ள­வில் காற்று மாசு­பாட்­டிற்கு பெரு­மளவு பங்கு வகிக்­கும் அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் அடுத்த பத்து ஆண்­டு­களில் பரு­வ­நிலை மாற்­றத்­துக்கு எதி­ரான செயல்­பாட்டை விரை­வு­படுத்த உறு­தி­பூண்டு இருந்­தன. ஆனால், இப்­போது இந்த உடன்­பாடு ஆட்டங்கண்டுள்ளது.

தைவா­னைச் சுற்றி சீனா அதன் போர்ப் பயிற்­சியை நேற்­றும் தொடர்ந்­தது. தைவான் மீது படை­யெ­டுக்­கவே சீனா இதைச் செய்து வரு­வ­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

தைவா­னின் கரை­யோ­ரப் பகுதி­களை சீனப் படை­கள் எந்த அள­வுக்கு நெருங்­கி­விட்­டன என்­ப­தைக் காட்­டும் வித­மாக, தைவா­னின் கரை­யோ­ரப் பகு­தி­க­ளை­யும் மலை­களை­யும் விமானி அறை­யில் இருந்து ஆகா­யப் படை விமானி ஒரு­வர் பட­மெ­டுப்­ப­தைக் காட்­டும் காணொளி ஒன்றை சீன ராணு­வம் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது.

சீன ஏவு­க­ணை­கள் தைவா­னுக்கு மேலே நேர­டி­யா­கப் பறந்­த­தாக சீன அர­சாங்க ஊட­க­மான சிசி­டிவி தெரி­வித்­தது. இத்­த­க­வல் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டால் பதற்­ற­நிலை அதிகரித்திருப்பதையே காட்டும்.

எனி­னும், சீனா­வின் இந்த மிரட்­ட­லுக்கு தான் அடி­ப­ணி­யப் போவ­தில்லை என்று தைவான் கூறி வரு­கிறது. 68 சீனப் போர் விமா­னங்­களும் 13 போர்க்கப்­பல்­களும் தைவா­ன் நீரி­ணைப் பகு­திக்­குள் நுழைந்­து­விட்­ட­தாக நேற்று முன்­தி­னம் தைவான் கூறி­யது.

இந்­நி­லை­யில், சீனா நடத்­தி­வரும் பெரிய அள­வி­லான, தீவி­ர­மான போர்ப் பயிற்­சிக்கு அமெ­ரிக்­கா­வும் இதர ஜன­நா­யக நாடு­களும் கண்­ட­னம் தெரிவித்துள்­ளன. அமெ­ரிக்­கா­வுக்­கான சீனத் தூதரை நேரில் அழைத்த வெள்ளை மாளிகை, சீனா­வின் செயல்­பாடு குறித்து அவரிடம் கண்டனம் தெரிவித்தது. பரு­வ­நிலை மாற்­றம் குறித்த ஒத்­து­ழைப்­பில் இருந்து வெளி­யேற சீனா எடுத்­துள்ள முடிவு, பூமி­யின் எதிர்­கா­லம் குறித்த கவ­லை­யைப் பர­வ­லாக்­கி­யுள்­ளது.

இந்த விவ­கா­ரம் குறித்து வாஷிங்­ட­னில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தேசிய பாது­காப்பு மன்­றப் பேச்­சா­ளர் ஜான் கிர்பி, சீனா­வின் இந்த முடிவு அடிப்­படையில் பொறுப்­பற்­றது என்று விமர்­சித்­தார்.

"உல­கம் முழு­வ­தை­யும் சீனா தண்­டிக்­கிறது. ஏனெ­னில், பரு­வ­நிலை மாற்­றம் நாட்டு எல்­லை­களுக்கு அப்பாற்பட்டது," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!