அங் மோ கியோ செர்ஸ்: புதிய வாய்ப்பு

குடியிருப்பாளர்களுக்கு அதே பேட்டையில் பிடிஓ வீடு; முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் விரும்பினால் விண்ணப்பிக்கலாம்

குறிப்­பிட்ட புளோக்­கு­களின் ஒட்டுமொத்த­ மறு­மேம்பாட்டுத் திட்­டத்­தால் (செர்ஸ்) பாதிக்கப்படும் அங் மோ கியோ குடியிருப்­பாளர்­களுக்கு இப்­போது ஒரு புதிய விருப்ப உரிமை கிடைத்து இருக்­கிறது.

அவர்­கள் விரும்­பி­னால் அதே குடி­யி­ருப்­புப் பேட்­டை­யில் புதிய அடுக்­கு­மாடி வீட்­டைப் பெற விண்ணப்­பிக்­க­லாம்.

பிடிஓ வீடு­கள் இந்த மாதம் விற்­ப­னைக்குக் கொடுக்­கப்­ப­டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்­போது அங் மோ கியோ­வில் 'சென்ட்­ரல் வீவ்' பிடிஓ வீடு­களில் 10% வீடு­கள், தகுதி உள்ள குடும்­பங்­க­ளுக்­காக முன்னு­ரிமை கொடுத்து ஒதுக்­கப்­படும்.

செர்ஸ் திட்­டத்­தால் பாதிக்­கப்­படும் குடி­யி­ருப்­பா­ளர்­களும் அவற்றில் அடங்­கு­வர்.

அதா­வது, வீட­மைப்பு வளர்ச்சிக் கழ­கம் பெறு­கின்ற விண்­ணப்­பங்­களின் எண்­ணிக்கை, மொத்த வீடு­களில் 10 விழுக்­காட்­டுக்­கும் குறை­வாக இருக்­கு­மா­னால், விண்­ணப்­ப­தா­ரர்கள் அனை­வ­ருமே ஒரு வீட்டை முன்­ப­திவு செய்­ய­லாம்.

வீட்டை தேர்ந்­தெ­டுத்­துக் கொள்­ளும் நடை­முறை, சீட்டுக் குலுக்­கல் மூலம் முடிவு செய்­யப்­படும். விண்­ணப்­பங்­க­ளின் எண்ணிக்கை 10%ஐ தாண்­டி­னால் மனு­தா­ரர்­க­ளுக்கு வழக்­க­மான பிடிஓ நடை­மு­றை­யைப் போலவே சீட்டு குலுக்­கல் மூலம் வரிசை எண் கொடுக்­கப்­படும்.

மறு­கு­டி­ய­மர்த்­து­தல், இட­மாறு தல், செர்ஸ், குத்­த­கை­யா­ளர்­கள் முன்­னு­ரிமை திட்­டம் ஆகி­ய­வற்றின் கீழ் 10% வீடு­கள் முன்­னு­ரிமை ஒதுக்­கீட்­டின்­படி கொடுக்­கப்­படும்.

வீவக வாடகை வீட்­டுக்­காரர்கள் போன்ற இதர வீடு வாங்கு­வோ­ரும் மற்­ற­வர்­களும் இதில் உள்­ள­டங்­கு­வர்.

வீவக ஆகஸ்ட் 5ஆம் தேதி அங் மோ கியோ செர்ஸ் குடி­யிருப்­பா­ளருக்கு கடி­தம் ஒன்றை அனுப்­பி­யது. அந்தக் கடிதத்தைத் தான் பார்த்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று தெரிவித்தது.

குடி­யி­ருப்­பா­ளர்­களில் சிலர் ஆகஸ்ட் மாதம் அங் மோ கியோ பிடிஓ வீட்­டுக்கு விண்­ணப்பிக்க விரும்புவதாக அந்­தக் கடி­தத்­தில் கழ­கம் தெரி­வித்­தது.

அந்த வீடு­கள் அங் மோ கியோ நக­ரத்­திற்­குள் இருக்­கும் என்­பதால் அவற்­றுக்கு மனு செய்ய குடி­யிருப்­பா­ளர்­களை அனு­ம­திக்­க­ கழ­கம் முடிவு செய்­தது.

வீடு ஒப்படைப்பு நாள், 2029ஆம் ஆண்டுக்குள் ஒரு நாளாக இருக்கும். வீட்டை ஒப்படைக்கும் நாள் என்பது சட்டபூர்வமான ஓர் உடன்பாட்டுத் தேதியாகும்.

வீடு வாங்குவோரிடம் வீட்டு சாவியை அத்தேதியில் கழகம் ஒப்படைத்து விடவேண்டும்.

ஆகஸ்ட் மாதம் பிடிஓ வீடு­கள் விற்­ப­னைக்கு வரும்­போது சுவா சூ காங்­கில் 'கியட் ஹோங் கிரேஞ்ச்' பிடிஓ திட்ட வீடு­கள், உட்­லண்ட்­சில் 'உட்­லண்ட்ஸ் சவுத் பிளைன்ஸ்' பிடிஓ திட்ட வீடு­கள், தெம்­ப­னி­சில் 'சன் பிளாசா ஸ்பிரிங்' பிடிஓ திட்ட வீடு­கள் ஆகி­ய­வற்றுக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் மனுச் செய்ய முடி­யும்.

இவை­யும் 10% முன்­னு­ரிமை ஒதுக்­கீட்­டிற்கு உட்­பட்­ட­தா­க இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!